ஹைதராபாத்: திமுக எப்படி தமிழ்நாட்டில் வாக்குறுதிகள் அளித்ததோ அதை பல்வேறு மாநிலங்களிலும் காப்பி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் பலரையும் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.
தமிழ்நாடு எப்போதுமே பல்வேறு வழிகளிலும் நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறது. அது கல்வியாக இருந்தாலும் சரி, மருத்துவமாக இருந்தாலும் சரி, வளர்ச்சியாக இருந்தாலும் சரி, புரட்சிகர திட்டங்களாக இருந்தாலும் சரி தமிழ்நாடு எப்போதுமே நாட்டுக்கே வழிகாட்டியாக இருந்துள்ளது.
ஜெயலலிதா காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் திட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இன்று பின்பற்றப்படுகிறது. அதேபோல பல்வேறு இலவசத் திட்டங்களை பல்வேறு மாநிலங்களிலும் பின்பற்றுகிறார்கள்.
தற்போதைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்துகள், பெண்களுக்கு மாதாந்திர உரிமைத் தொகை ஆகியவற்றையும் இப்போது காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டனர். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை தரும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. இதை தற்போது காங்கிரஸும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.
தெலங்கானாவில் அந்த மாநில மக்களுக்கு 6 முக்கியமான உறுதிமொழிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதில் ஒன்றுதான் மகாலட்சுமி திட்டம். இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2500 உதவித் தொகை வழங்கப்படும். இது திமுகவின் மகளிர் உரிமைத் திட்டமேதான்.
அதேபோல பெண்களுக்கு இலவச பஸ் பயணச் சலுகையையும் அது அறிவித்துள்ளது. இதுவும் கூட ஏற்கனவே திமுக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றுள்ள திட்டம்தான். இந்தத் திட்டத்தை கர்நாடகத்திலும் காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}