சென்னை : 2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட போகிறதா அல்லது கூட்டணி வைத்து போட்டியிட போகிறதா, அப்படியே கூட்டணி வைத்தால் யாருடன் விஜய் கூட்டணி சேருவார் என்பது தற்போது வரை தமிழக அரசியலில் ரகசியமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த அனைத்து கேள்விகளுக்குமான பதிலை பட்டென போட்டு உடைத்துள்ளார் காங்கிரஸ் மேலிட தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்.
தமிழக தேர்தலுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஷ் சோடங்கருக்கு, விஜய்யின் தேர்தல் பிளான் எப்படி தெரியும் என்ற கேள்வி தோன்றலாம். ஆனால் ஒரு தேசிய கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருக்கக் கூடியவர் காரணம், ஆதாரம் இல்லாமலா ஒரு விஷயத்தை சொல்லுவார். கிரிஷ் சோடங்கர் அப்படி என்ன சொன்னார் என தெரிந்தால் விஜய்யின் தேர்தல் பிளான் பற்றிய கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்.

தவெக தற்போது வரை காங்கிரஸ் தங்களின் கூட்டணிக்கு வரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய போது, தான் தனித்து போட்டியிட போவதில்லை என்றும், நீங்கள் வரவில்லை என்றால் நான் என்டிஏ பக்கம் போவதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்றும் விஜய் கூறியதாக சொல்லப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ள முடியாமலும், உட்கட்சி விவகாரங்களாலும் தவெக பக்கம் செல்வதற்கு காங்கிரஸ் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் கிரிஷ் சோடங்கர் தேசிய ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை போய் சந்தித்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். கூட்டணி பேச தான் சந்தித்தார் என எதை வைத்து சொல்கிறீர்கள்? திமுக எங்களின் நீண்ட கால கூட்டணி கட்சி. அவர்களுடனான கூட்டணியை நாங்கள் எப்படி முறித்துக் கொள்வோம். தமிழக சட்டசபை தேர்தலில் தேவைபட்டால் விஜய்யுடன் மோதுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக அரசியலை பொறுத்தவரை கடந்த 48 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அந்த அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என யார் தான் விரும்ப மாட்டார்கள்? தமிழக தேர்தலில் முதலில் தவெக, தவெக.,வாக போட்டியிடுகிறதா என பாருங்கள் என்றார்.
இவர் கூறியதில் கடைசியாக சொன்னது தான் கவனிக்க வேண்டியது. அதாவது, தவெக தனித்து போட்டியிட்டால் தான் அது தவெக போட்டியிடுவதாக இருக்கும். அப்படி இல்லாமல் கூட்டணி அமைத்தால், அது தவெக போட்டியிடதாக அர்த்தமாகாது. இதிலிருந்து தவெக, கூட்டணி வைத்து தான் போட்டியிட போகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். கூட்டணி என்றால் யாருடன்? ஒன்று திமுக கூட்டணி அல்லது அதிமுக கூட்டணி. திமுக.,வுடன் விஜய் கூட்டணி அமைப்பதற்காக வாய்ப்புகள் மிக மிக குறைவு. அது மட்டுமில்லாமல் கிரிஷ் சோடங்கர் கூறிய, தேவையப்பட்டால் விஜய்யை எதிர்த்து சண்டையிடும் என்றபதை வைத்து பார்த்தால் காங்கிரஸ் இருக்கும் திமுக கூட்டணிக்கு விஜய் போக போவது கிடையாது.
அப்படியானால் மீதமுள்ள ஒரே கூட்டணி, அதிமுக கூட்டணி தான். அவர்கள் பக்கம் விஜய் போவாரா என்றால், அதற்கு ஓரளவிற்கு வாய்ப்பு உள்ளது. அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து, தவெக.,வும் கணிசமான எம்எல்ஏ.,க்களை பெற்றால் அமைச்சரவையில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது. அதோடு விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கும் அது கூடுதல் பலமாக இருக்கும். ஒருவேளை பெரிய அளவில் எம்எல்ஏ.,க்களை பெற முடியாமல், மீண்டும் சினிமாவில் நடிப்பை தொடர முடிவு எடுத்தால் கூட அதிமுக துணை நிற்கும். அடுத்த தேர்தல்களில் தவெக கூடுதல் இடங்களை வெல்லுவதற்கும் வாய்ப்புள்ளது.
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
மலை போல வந்ததா? மழை போல வந்ததா? .. ஒரு மொழித் தேடல்!
வேகம் விவேகமானதா..?
செம்மையாக வாழ வேண்டும்.. எப்படி தெரியுமா.. ஸ்டீபன் ஹாக்கிங் போல!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்!
மகாலட்சுமியின் வடிவம்.. பூமாதேவியின் அம்சம்..வராகி அம்மன் சிறப்புகள்!
பொங்கலுக்கு ரூ.3000 கொடுக்க...விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றிய திமுக அரசு: அண்ணாமலை
யாருடன் கூட்டணி?...நாளை முடிவெடுக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்
{{comments.comment}}