டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் வந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் மாறும், பொறுத்திருந்து பாருங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி முடிவடைந்தது. தேர்தல் முடிந்த அன்று மாலையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில், இந்தியா கூட்டணி கட்சிகளை விட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான கருத்து கணிப்புகள் மோடி ஆட்சி மீண்டும் அமையும் என்று தெரிவித்தன.

இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா இன்று டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பிக்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தியிடம் எக்சிட் போல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், தேர்தலுக்கு பிந்தைய கருணித்து கணிப்புகள் மாறும், பொருத்திருந்து பாருங்கள். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கலைஞர் பிறந்த நாள் அன்று திமுக தோழர்களுடன் அவருக்கு மரியாதை செலுத்தியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பல சந்தர்ப்பங்களில் கருணாநிதியைச் சந்தித்து அவரின் உரையை கேட்டதும், அவரின் அறிவுரைகளால் பலனடைந்தது அதிர்ஷ்டம் கருதுகிறேன் என்று கூறினார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}