சென்னை: சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சிற்கு, அவர் எங்கள் தீம் பாட்னர் என்று சொன்ன டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சீமானின் சர்ச்சை கருத்தை ஆதரிக்கிறாரா என எம் பி சுதா கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த அவதூறு கருத்துக்களை பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பாஜக மூத்த தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சீமானின் சர்ச்சை பேச்சுக்கு அவர் எங்கள் தீம் பாட்னர் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியும் வழக்கறிஞரும் ஆன சுதா காட்டமான கேள்விகளை எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

தான் மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரிகமான மனிதர் என்பதை மீண்டும் ஒருமுறை சீமான் நிரூபித்திருக்கிறார். பெண்கள் தொடர்பாக பொது வெளியில் அயோக்கியர்கள் கூட பேச தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார். 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் வசிக்கும் தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு பெண்ணை கொச்சைப்படுத்தி பேசி கொண்டிருக்கிறார். சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியில் இருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.
பெரியார் விவகாரத்தில் ஆதாரம் இன்றி அவதூறாக சீமான் பேசியபோது அவர் எங்கள் தீம் பார்ட்னர் என்று டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சீமான் பேசிய பேச்சுக்கள் எந்த நாகரிக சமுதாயத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறினார்.
மேலும் சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு, அவர் எங்கள் தீம் பார்ட்னர் என்று சொன்ன டாக்டர். தமிழிசை என்ன சொல்லப் போகிறார். அவர் கருத்தை ஆதரிக்கிறாரா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!
அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!
முழுமை - படைப்பின் நியதி (Perfection is the order of Life)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 28, 2025... இன்று இடமாற்றங்கள் ஏற்படும் நாள்
இலங்கை அருகே.. மலைகளுக்கு இடையே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் டித்வா புயல்..!
தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!
நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்
தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!
{{comments.comment}}