மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒவ்வொரு வீட்டிலும் தங்களுக்கு வாக்குகள் இருப்பதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும், அவர் வெறும் "வாயில் வடை சுடுகிறார்" என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் தவெக தரப்பிலிருந்து வெளியான தகவல்களில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தங்களுக்கு ஆதரவாளர்கள் இருப்பதாகவும், வரும் தேர்தல்களில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கருத்தை முன்வைத்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ தனது வழக்கமான பாணியில் பதிலடி கொடுத்தார்.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் என்பது சினிமாவில் நடிப்பது போன்றது அல்ல. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவது என்பது பல ஆண்டுகால உழைப்பு. விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார், அதற்குள் ஒவ்வொரு வீட்டிலும் வாக்கு இருப்பதாகக் கூறுவது மிகையானது. இவர் எத்தனை வீடுகளுக்கு போய் நூழைந்து பார்த்தார். இது எல்லாம் ஒரு பில்டப் தான்.

விஜய் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம், ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. அவர் வெறும் வாயில் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் வரும்போதுதான் உண்மையான நிலவரம் தெரியும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. புதுக்கட்சிகள் எல்லாம் தங்களை பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள இப்படித்தான் பேசுவார்கள்.
இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?. முதலில் விஜய் ரசிகர்களை கட்டுப்படுத்த முடிகிறதா? அரசியல் செய்வேன் என்று கட்சி தொடங்கி விட்டு அறையிலேயே இருந்தால் எப்படி. முதல்ல களத்துக்கு வந்து மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தவெக கட்சி மாநாட்டிற்குப் பிறகு, அக்கட்சியின் மீதான மற்ற அரசியல் கட்சிகளின் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே விஜய்யின் அரசியல் வருகையை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், செல்லூர் ராஜூவின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வீரம் செழித்திடும் இமயத்தில்.. பாரத கொடியை பார்புகழ நாட்டிடுவோம்!
அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
எழுத்து!
தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
77வது குடியரசு தினமும்.. வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழாவும்.. சிறப்பு!
ஒற்றைச் சொல்…!
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
வேற்றுமையில் ஒற்றுமையே .. நம் தேசத்தின் சிறப்பு!
{{comments.comment}}