சென்னை: வட நாட்டு அரசியலில் பெரும் திருப்பம் வரப் போவதாக ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக கவிஞர் வைரமுத்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் புதிய சலசலப்பு கிளம்பியுள்ளது.
ரஜினிகாந்த் இதுவரை நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. வரப் போவதாக சொன்னார். பின்னர் பின்வாங்கி விட்டார். பல்வேறு அரசியல் அழுத்தங்களும் அவருக்குத் தரப்பட்டன. ஆனால் அவர் எதிலும் சிக்கிக் கொள்ளவில்லை. அவர் அரசியலில் இல்லாவிட்டாலும் கூட அவரை வைத்தும் அவரைச் சுற்றியும் ஏகப்பட்ட அரசியல் உள்ளன.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ஒரு புதிய தகவலைக் கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள கவிதை நடைப் பதிவு:

சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் அவர்கள்
நேற்று எனது இல்லத்திற்கு
வருகை தந்தார்
‘பாசமுள்ள மனிதனப்பா - நான்
மீசவச்ச குழந்தையப்பா’
என்ற வரிகளுக்கு
இப்போதும் அவர்தான்
இலக்கியமாக இலங்குகிறார்
வியப்புக்குரிய மனிதர்தான்
அடித்துக்கொண்டோடும்
அரசியல் வெள்ளம்,
சாய்த்துவிட்டோடும்
சமூகப் புயல் இரண்டையும்
அரைநூற்றாண்டாய்க் கடந்து
தன்னிடத்தை ஒருவர்
தக்கவைத்துக் கொள்வது
ஜாதகத்தால் ஆவதல்ல;
சாமர்த்தியத்தால் ஆவது
உணவு முறை
உடல் நிலை குறித்து
ஊடாடிய எங்கள் உரையாடல்
ஊர் சுற்றக் கிளம்பியது
எங்கள் நூறு நிமிட
உரையாடலை
‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை
தமிழ்நாட்டின் நிகழ்கால
வெப்ப அரசியல் குறித்து
விவாதித்தோம்
ஒவ்வொரு தரவிலும்
அவருக்குள்ள
ஆழமும் தெளிவும் உண்மையும்
என் ஆர்வத்தைத் தூண்டின
வடநாட்டு அரசியல் குறித்தும்
அங்கு
நேரப்போவதாக நம்பப்படும்
ஒரு திருப்பம் குறித்தும்
அவர் சொன்னபொழுது
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்
அடுத்த
இரண்டு ஆண்டுகளுக்கான
அவரது கலைப்பயணத்தின்
திட்டங்களை விவரித்தார்
2027 ரஜினி ரசிகர்களுக்குக்
கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்;
குறித்துக்கொள்ளுங்கள்
அவரிடம்
முதிர்ச்சி தெரிகிறது;
முதுமை தெரியவில்லை
‘இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது’
என் தமிழ்
பொய்யாகவில்லை
ரஜினி சொன்ன அந்தத் திருப்பம் என்ன என்பது பெரும் எதிர்பார்ப்புகளையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. வட நாடு என்று அவர் சொல்லும்போது வட நாட்டு அரசியலுக்கு மட்டும் தொடர்புடைய திருப்பமா அல்லது தேசிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் திருப்பமா, பிரதமர் பதவி குறித்து ஏதாவது அவர் சொன்னாரா அல்லது வேறு என்ன சொன்னார் என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
4வது முறையாக தேசியக் கொடியேற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்.. தேசத்தை வழிநடத்திய ஆளுமைகள்.. ஒரு பார்வை!
77வது குடியரசு தினம்.. டெல்லியில் விழாக்கோலம்.. கடமைப் பாதையில் பிரம்மாண்ட கொண்டாட்டம்!
பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள்
77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
{{comments.comment}}