புதுச்சேரி : புதுச்சேரி போலி மருந்து வழக்கை அரசே மூடி மறைக்க பார்க்கிறது. அரசின் ஒத்துழைப்போடு கைது செய்யப்பட்ட 26 பேர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஏற்பாட்டில் பூரணாங்குப்பத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் வைத்தியநாதன் எம்எல்ஏ, மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராஜா உள்ளிட்ட 26 பேர் இப்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.போலி மருந்து தயாரித்து விற்று மக்கள் உயிரோடு விளையாடியது கொலை குற்றத்துக்கு சமம்.

இந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு நீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை. அவர்களை விடுவிக்கக்கூடாது என்று அழுத்தம் தரவில்லை. முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், உள்துறை அமைச்சர் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக அரசு ஊழல் குற்றவாளிகள். போலி மருந்து தயாரித்தவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த வழக்கை மூடி மறைக்க பார்க்கிறார்கள். சிபிஐ கூட முறையாக விசாரிப்பார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவத்துறை முதல்வரின் துறை. இதில் ஊழல் நடந்திருக்கிறது. இவ்வாறு இருந்தும் ஜாமீனில் வெளியே வருகிறார்கள் என்றால் அரசின் ஒத்துழைப்பு இல்லாமலும், ஆதரவு இல்லாமலும் வெளியே வர முடியாது.
இதில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், ஜிஎஸ்டி அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அரசே இந்த வழக்கை மூடி மறைக்க பார்க்கிறது. இதில் குற்றவாளிகளும், ஆட்சியாளர்களும் கூட்டு சதி செய்கின்றனர். இதனை விடமாட்டோம். நீதிமன்றம் சென்று நியாயத்தை கேட்போம், என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி செய்தியாளர்களிடம் கூறும்போது, போலி மருந்து வழக்கில் சிபிஐ வருவதற்கு முன்பே ஜாமீனை கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று இந்த அரசு முயற்சி செய்து வெற்றி அடைந்துள்ளனர். இந்த அரசு அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று மறுக்கக்கூட இல்லை. மாறாக அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு உண்டான வழிகளையெல்லாம் செய்து ஜாமீன் வழக்கப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் பணம் இல்லை என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் ரூ.5 ஆயிரம் கோடி கொள்ளையடித்த போலி மருந்து நிறுவனத்தினரை விட்டுவிட்டு பணம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய மோசடி. இதுபோன்ற மோசடியை புதுச்சேரியில் இதுவரை பார்த்ததே இல்லை என்றார்.
வானுலகின் பேரொளியில், ஒரு பொக்கிஷம்.. Divine Gift!
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
மலை போல வந்ததா? மழை போல வந்ததா? .. ஒரு மொழித் தேடல்!
வேகம் விவேகமானதா..?
செம்மையாக வாழ வேண்டும்.. எப்படி தெரியுமா.. ஸ்டீபன் ஹாக்கிங் போல!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்!
மகாலட்சுமியின் வடிவம்.. பூமாதேவியின் அம்சம்..வராகி அம்மன் சிறப்புகள்!
பொங்கலுக்கு ரூ.3000 கொடுக்க...விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றிய திமுக அரசு: அண்ணாமலை
{{comments.comment}}