புதுடில்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பாத யாத்திரைகள் நடத்தப்படவுள்ளது.
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி நாடுமுழுவதும் பாரத் ஜோடா யாத்திரை என்ற ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். இந்த யாத்திரையானது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்றது. நாடு முழுவதும் காங்கிரஸின் செல்வாக்கை அதிகரித்ததோடு, மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும் இது ஏற்படுத்தியது.

இந்த யாத்திரைக்கு பெரும் ஆதரவும் காணப்பட்டது. ஆங்காங்கே முக்கியஸ்தர்கள் பலரும் கூட இதில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தனர். தமிழ்நாட்டிலிருந்து கனிமொழி, கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த யாத்திரை தொடங்கி ஒரு வருடம் நிறைவடைவதையும் யாத்திரை நடத்தி கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வருடம் பாரத் ஜோடா யாத்திராயை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையை மேற்கொண்டார்.
இந்த யாத்திரையினால் காங்கிரஸ் புத்துயிர் பெற்றது. முதல் யாத்திரையின் வெற்றியை கொண்டாடும் விதமாக மீண்டும் ஒரு யாத்திரையை காங்கிரஸ் துவங்குகிறது. இந்தியா முழுவதும் 722 மாவட்டங்களில் செப்டம்பர் 7ம் தேதி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}