டெல்லி: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகதி என்ற பெயரில் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மறறும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. 3 கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளவையாகும்.
மகாராஷ்டிராவில் 48 தொகுதிகள் உள்ளன. இவற்றை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பது குறித்து நேற்று பேசப்பட்டது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்தபோது, தொகுதிப் பங்கீடு முடிவடைந்ததா என்று செய்தியாளர்கள் கேட்டபோது புன்னகைத்தபடி, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், ஒற்றுமையாகவே இருப்போம்.. இணைந்தே சந்திப்போம் என்று பதிலளித்தார்.

பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ஒவ்வொரு தொகுதி குறித்தும் விரிவாக பேசினோம். தொகுதிப் பங்கீட்டை முதலில் அறிவிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கும். சிவசேனா கட்சியை அவர்கள் உடைத்திருக்கலாம். ஆனால் மக்கள் உத்தவ் தாக்கரேவுடன்தான் இருக்கிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் அவர்கள் குழப்பம் விளைவித்திருக்கலாம்.. ஆனால் சரத் பவார் பின்னால்தான் மக்கள் உள்ளனர். அனைவரும் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்றார் ரமேஷ் சென்னிதலா.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உ.பி. பேச்சுவார்த்தை தொடருகிறது
மறுபக்கம் உத்தரப் பிரதேசம் தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. உ.பி. காங்கிரஸ் சார்பில் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் சரியான திசையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சுமூகமாக எல்லாம் முடியும் என்றார்.+
தொடர்ந்து அவர் கூறுகையில், கற்பனைக்கும் எட்டாத வகையில் எங்களுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையிலான உறவு சுமூகமாக உள்ளது. எத்தனை தொகுதிகள் என்பதை மட்டும் நாங்கள் இறுதி செய்ய வேண்டும், அவ்வளவுதான் என்றார் அவர்.
இதெல்லாம் எளிதாக சமாளித்து விடக் கூடிய கட்சிகள்தான். ஆனால் ஆம் ஆத்மி, திரினமூல் காங்கிரஸ் கட்சிகள்தான் அதிக அளவில் எடக்கு மடக்கான கட்சிகள். இவர்களுடன் காங்கிரஸ் எப்படி தொகுதிப் பங்கீட்டை நடத்தப் போகிறது என்பது தெரியவில்லை.
பீகாரில் காங்கிரஸுக்குப் பெரிதாக பிரச்சினை கிடையாது. அங்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே பூர்வாங்கப் பேச்சுக்கள் தொடங்கி விட்டன. நிதிஷா குமார் யாதவின் ஐக்கிய ஜனதாதளம் 17 சீட் வரை கேட்பதாக தெரிகிறது. பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. ராஷ்டிரிய ஜனதாதளமும் 17 சீட் வரை கேட்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட் கிடைக்கலாம். ஒரு தொகுதி சிபிஐ எம்எல் கட்சிக்குப் போக வாயப்புண்டு.
வட மாநில தொகுதிப் பங்கீடுதான் சிக்கலானது என்பதால் முதலில் அங்கு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதை முடித்த பிறகு பிற மாநிலங்களுடன் அது பேசும்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}