டில்லி : பிரியங்கா காந்திக்கு எதிராக கட்சிக்குள் சதி நடக்கிறது. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் என அடுக்கடுக்காக பல தகவல்களை சொல்லி அனைவரையும் அதிர வைத்துள்ளார் பிரியங்கா காந்தியின் முன்னாள் உதவியாளர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்.
காங்கிரஸ் முன்னாள் பிரமுகரும், பிரியங்கா காந்தியின் உதவியாளராகவும் இருந்த ஆச்சார்யா, பகீர் கிளப்பும் பல தகவல்கள் அடங்கிய பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர், ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவதற்கு பதிலாக பாகிஸ்தானின் ராவல்பின்டியில் போட்டியிடலாம். ஏனெனில் பாகிஸ்தானின் தான் அவருக்கு புகழும் செல்வாக்கும், மவுசும் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பிரியங்கா காந்திக்கு எதிராக மிகப் பெரிய சதி நடக்கிறது. ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்காவை கட்சியில் ஓரங்கட்ட பார்க்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர், ராஜ்யசபா எம்பி, தற்போது லோக்சபா தேர்தல் என எந்த பதவியும் பிரியங்காவிற்கு கிடைக்காமல் சதி நடக்கிறது. அமேதியில் போட்டியிடாததால் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் ராகுல் காந்தி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அதுவும் பிரியங்கா காந்தியின் ஆதரவாளர்கள் ராகுல் காந்தி மீது மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள். ஜூன் 04ம் தேதிக்கு பிறகு அந்த கோபம் வெளியில் வரும். அமேதியில் இருந்து ராகுல் காந்தி, வெளியேறியதும் காங்கிரஸ் தொண்டர்களிடையே மரியாதை போய் விட்டது.
பிரியங்கா காந்தியையும் தேர்தலில் போட்டியிடாமல் செய்து விட்டதால் அது அவரின் ஆதரவாளர்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஜூன் 4க்கு பிறகு வெளிப்படும். ஜூன் 4க்கு பிறகு காங்கிரஸ் இரண்டாக உடையும். அப்புறம் ஒரு தலைவர் அல்ல. இரண்டு தலைவர்கள் இருப்பார்கள். ஒன்று ராகுல் காங்கிரஸ், மற்றொன்று பிரியங்கா காங்கிரஸ் என ஆகும். ராபர்ட் வதேரா, நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஏன் அமேதியில் மட்டும் தான் போட்டியிட வேண்டுமா? அவர் படித்தவர், திறமையானவர். அவர் சுயேட்சையாகவே போட்டியிட கூடிய வல்லமை படைத்தவர் என்றார்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்தேவும் இதையே வலியுறுத்தி உள்ளார். அவர் கூறுகையில், ரேபரேலியில் எங்க பார்த்தாலும் பிரியங்காவின் போஸ்டர்கள் தான் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் ராகுல் காந்தி, திடீரென அங்கு போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளார் என்றார்.
80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.,யில், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுவதாக தான் முதலில் முடிவு செய்யப்பட்டிருந்ததாம். கடைசி நிமிடத்தில் ராகுல் காந்தி தலையிட்டு தான், பிரியங்காவை ரேபரேலியில் போட்டியிடாமல் தடுத்து, தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், அமேதியில் போட்டியிடாமல் ரேபரேலியை தேர்வு செய்ததாகவும் கட்சிக்குள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
20ம் தேதி ரேபரேலி, அமேதி இரு தொகுதிகளிலும் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய, மூத்த நிர்வாகியே ராகுலுக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டுகளை சொல்லி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}