என்னது முட்டை பொரியலா.. பயப்படாதீங்க.. இத வேற லெவல்ங்க.. வாங்க சமைக்கலாம்!

Dec 31, 2022,10:18 PM IST
என்னது முட்டை பொரியலா.. பயப்படாதீங்க.. இத வேற லெவல்ங்க.. வாங்க சமைக்கலாம்!

வழக்கமான முறையில் முட்டை பொரியல் செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா?? கவலையை விடுங்க பாஸ்.. இதோ!! ஒரு மாற்று வழி இருக்கு.. இப்படி ஒரு முறை செய்து சுவைத்துவிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும்.. சலித்து போகவே போகாது.. அப்படிப்பட்ட முட்டை பொரியலை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோமா!!!

வாங்க கிச்சனுக்குள் போகலாம்

முட்டைப் பொரியல் செய்ய என்னெல்லாம் தேவை?

முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
கரிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லி  - 10 தண்டுகளுடன்
மிளகுதூள்  - 1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள்  - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள்  - 2 சிட்டிகை
கடுகு - 2 சிட்டிகை
சீரகம் - 1 சிட்டிகை
சோம்பு - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப


எப்படி பண்ணலாம்?

இரண்டு பெரிய வெங்காயத்தையும் ஒரு தக்காளியையும் நறுக்கி சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்..
 பிறகு கரிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியையும் பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.. நான்கு முட்டையையும் ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி வைக்கவும்..

அடுப்பில் குழியான பாத்திரம் ஒன்றை வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும்.. எண்ணெய் சூடேறியதும் அதில் கடுகு, சீரகம், சோம்பு போட்டு பொரியும் வரை காத்திருக்கவும்.. பிறகு அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி கலவையை ஊற்றி மிதமான சூட்டில் கிண்டவும்.. பச்சை வாசனை போன உடன் அதில் நறுக்கிய கரிவேப்பிலை கொத்தமல்லி தூவி கிளறவும்.. மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒன்றாகி எண்ணெய் திரண்டு வர, அப்போது அதில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இடைவெளி விடாமல் கட்டி தட்டாமல் குறைந்த நெருப்பில் கிளறவும்..

முட்டை வெந்திருக்க வேண்டும் ஆனால் ஈர பதம் முழுமையாய்  போய் விடாமலும் இருக்க வேண்டும்.. (கிட்டத்தட்ட ஆப் பாயில் மாதிரி). அந்த பக்குவத்தில் நெருப்பை அணைத்து, பரிமாறி சுவைத்து பாருங்கள்.. அருமையாய் இருக்கும்.. வாயில் வைத்தவுடன் கரைந்து போகும்.. சாப்பிட்டு முடித்தவுடனும் மீண்டும் சமைத்து உண்ண ஆசை வரும்..

இதை சாதம், தோசை, சப்பாத்தி, பூரி என  எல்லா உணவுடனும் உண்ணலாம்.. அப்படியேவும் கூட சாயங்காலம் தேநீர் அருந்தும்போதும்  சாப்பிடலாம்.. சுலபமான, சுவையான, சலிக்காத சிறு சமையல் ரகசியம்.. என்ன சாப்பிட்டு ருசிச்சீங்களா.. அப்படியே மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!!

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

தாய்!!!

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்