- கூ.சோ.ரேணுகா
சென்னை: அடிக்கிற வெயிலுக்கு நாக்குக்கு ஏதாவது சுவையா கேட்கத்தான் செய்கிறது.. அதைத் தடுக்க முடியாது இல்லையா.. உங்களோட மைன்ட் வாய்ஸ் கேப்சர் பண்ணித்தான் இப்போது சூப்பரான ஒரு டிஷ்ஷுடன் வந்துள்ளோம்.
பிரண்டை துவையலை சாதத்துக்கு சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. இந்த மழைக்கு செம டேஸ்ட்டா மட்டுமல்லா, பூஸ்ட்டாவும் இருக்குங்க. பிரண்டை ஆரோக்கியத்துக்கும் ரொம்ப ரொம்ப நல்லது. செய்வதும் சுலபம்தான்.
சரி வாங்க செஞ்சு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
1. பிரண்டை ஒரு சிறு கட்டு
2. உளுந்து கருப்பு சிறிதளவு
3. கடலை பருப்பு சிறிதளவு
4. சீரகம் சிறிதளவு
செய்முறை
பருப்புகளை வதக்கி சீரகம் போட்டு, காய்ந்த மிளகாய் தேவைக்கு ஏற்ப, தேவையான அளவு எண்ணெயை ஊற்றி கடலைப் பருப்பும் உளுத்தம் பருப்பும் போட்டு வதக்கி சீரகம் காய்ந்த மிளகாய் இட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு நார் நீக்கிய பிரண்டை துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப புளியும் கும்மிவிட்டு, ஆறிய பின்னர், அம்மியிலோ அல்லது மிக்ஸியிலோ துவையல் போல் அரைத்து எடுக்கவும்.
கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை தாளித்தால் சூப்பரா பிரண்டை துவையல் ரெடி.
இதை இட்லி சப்பாத்தியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது சூடான சாதத்தில் பிசைந்து உண்ணவும் செமையாக இருக்கும்.
மிகவும் ருசியானது மட்டுமல்லீங்க, எலும்புகளுக்கு பலம் அளிக்கக்கூடியதும் கூட. கால்சியம் சத்து நிறைந்த பிரண்டை துவையல் மறக்காமல், தவறாமல் அடிக்கடி சாப்பிட வேண்டியதும் கூட.
(கூ.சோ.ரேணுகா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
ஆல் பாஸ்.. ஒரு ஃபீல் குட் மூவி.. பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி, சசிக்குமார்
பிரண்டை துவையல்.. டேஸ்ட்டானது.. உடம்புக்கு ரொம்ப பூஸ்ட்டானதும் கூட!
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
தேரே இஷ்க் மெய்ன் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல்.. புதிய சாதனை படைத்த நடிகர் தனுஷ்!
பொத்துக்கிட்டு ஊத்துதுங்க மழை.. காலையிலிருந்து சென்னையிலும், புறநகர்களிலும்!
டிட்வா புயலுக்குப் போட்டியாக விறுவிறுன்னு ஏறி வரும்.. தங்கம் விலை.. அம்மாடியோவ்!
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
{{comments.comment}}