சென்னை: அப்பாடா ஒரு வழியா பொங்கல் முடிஞ்சாச்சு.. அட இருங்க பாஸ்.. இன்னும் பொங்கல் முடியலை.. ஏன்னா உங்களுக்கு சூப்பரான ஒரு பொங்கல் டிப்ஸ் தரப் போறோமே இப்போ.. அதையும் செஞ்சு பார்த்துட்டு அப்புறமா பொங்கலை சிறப்பா முடிச்சுக்கலாம்.. என்ன ஓகே.வா.. வாங்க மறுபடியும் கிச்சனுக்குள்ள போகலாம்.
தேவையான பொருட்கள் :
1. வரகு அரிசி - 2 கப் (நன்கு கழுவிக் கொள்ளவும்)
2. பாசிப் பருப்பு - 1 கப்
3. இஞ்சி, பூண்டு - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
4. சீரகம், மிளகு - 1 ஸ்பூன்
5. பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
6. வெல்லம் - 1 கப்பு துருவியது
7. ஏலக்காய் - 3 பொடித்தது
8. நெய் - 2 ஸ்பூன்
9. முந்திரி - 20 (சிறிதாக)
10. கறிவேப்பிலை - 6
செய்முறை :

குக்கரில் வரகு அரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து 6 கப் தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும். (1 க்கு 2 பங்கு என்ற வீதத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டும்)
பொங்கலை பாதியாக பிரித்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை பொங்கல் - வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து, ஏலக்காயை தட்டி சேர்க்கவும். பாகு பதம் வந்ததும் வடிகட்டி பாதி எடுத்து வைத்த பொங்கலில் ஊற்றவும். ஏலக்காய் பொடியும் சேர்க்கலாம். நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்தால் சர்க்கரை பொங்கல் ரெடி.
கார பொங்கல் - சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சிறிது நெய்யில் வறுத்து போட்டு மீதி பொங்கலுடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும். சட்னி, சாம்பாருடன் சாப்பிட அருமை.
பலன்கள் :
வரகு அரிசி:
1. வரகு அரிசியில் கோதுமையை விட நார்ச்சத்து அதிகம்.
2. மாவுச்சத்து இதில் குறைவு. ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
3. உடல் எடையை குறைக்க ஏற்றது.
4. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. நிறைவான உணவாக இருக்கும்.
6. குடல் புண் குணமாகும்.
7. மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
8. இரும்பு சத்து, வைட்டமின்கள், பாஸ்பரஸ், கால்சியம், தாது உப்புக்கள் நிறைந்தது.
9. இதயம் பலப்பட்டு இதய ஆரோக்கியம் மேம்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}