சென்னை: வணக்கம் தோழிகளே எப்படி இருக்கீங்க எல்லோரும்?
இந்த சோசியல் மீடியா வந்தாலும் வந்ததுங்க, யூடியூப், ரீல்ஸ் எல்லாம் பார்த்துட்டு நம்ம வீட்ல இருக்க சிறுசு முதல் பெருசுவர எல்லாரும், ஏதாவது டிஃபரண்டா சமையல் செய்து தாங்க என்று தொல்லை பண்ணுவாங்க.. பத்து ரீல்ஸ் பாத்து அதில் பாதி சமையல் பத்தினதாவே இருக்கு. டெய்லி என்ன சமைக்கிறதுன்னு யோசிச்சே நமக்கு டென்ஷன் ஆயிடும்.
பட்.. அதெல்லாம் பத்தி கவலைப் படாதீங்க ஃபிரண்ட்ஸ்! நான் இன்னைக்கு சொல்ல போற டிஷ் டிஃபரண்டாவும் இருக்கும். அதோட ஹெல்த்தியும் கூட! அப்படி என்ன டிஷ்னு தானே கேக்குறீங்க, புட்டும் கடலை கறியும் தாங்க.
அட போங்கப்பா, இதை கத்துக்க கேரளா வரைக்கும் போகணும்னு யோசிக்காதீங்க! நம்ம வீட்ல உள்ள பொருட்களை வச்சே சிம்பிளாவும், டேஸ்டியாவும் பண்ணலாம் ஃபிரண்ட்ஸ்! எப்படின்னு சொல்றேன், முதல்ல புட்டு எப்படி செய்யணும்னு பார்ப்போமா!

புட்டு செய்ய தேவையான பொருட்கள்
அரிசி மாவு- ஒரு கப்
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- சிறிதளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். பின் மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை இட்லி பாத்திரத்தில் ஆவியில் அல்லது புட்டு குழலில் வேக வைத்து எடுத்தால் சூடான புட்டு தயார்.
அடுத்து அதற்கேற்ற சூப்பர் சைடிஷ் ஆன கடலை கறி எப்படி பண்றதுன்னு பாப்போமா!
கடலை கறி தேவையான பொருட்கள்:
கருப்பு சுண்டல் -1 கப்
சின்ன வெங்காயம்- 6
பெரிய வெங்காயம்- 1
தக்காளி-2
பட்டை-2 துண்டு
கிராம்பு -4
சோம்பு-1 ஸ்பூன்
மிளகு -1 ஸ்பூன்
தேங்காய் துருவல் -3 ஸ்பூன்
கடுகு -1/4 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
மல்லித்தூள் -1 ஸ்பூன்
உப்பு- தேவைக்கேற்ப
கருவேப்பிலை- சிறிதளவு
செய்முறை: முதலில் ஒரு குக்கரில் கருப்பு சுண்டல் சேர்த்து, அதனுடன் சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும். வறுத்த தேங்காய் துருவலை ஒரு தட்டில் மாற்றி விடவும்.
பின் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் சோம்பு, 2 துண்டு பட்டை, 4 கிராம்பு, மிளகு 1 ஸ்பூன் சேர்த்து வறுக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி தேங்காய் துருவலுடன் கலந்து நன்கு அரைத்துக் கொள்ளவும். [all masalas dry roast] மசாலா தயார்.

பிறகு ஒரு வாணலியில் 2 இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின், தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும். பின்னர் அரைத்த மசாலா, தேவையான உப்பு ,தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து திக்கான கிரேவி பதம் வந்ததும் அடுப்பை ஆப் செய்யவும். சூடான கிரேவியில் கடைசியாக கருவேப்பிலை தூவி இறக்கினால் அருமையான கடலைக்கறி ரெடி.
அப்புறம் என்னங்க தட்டில் சூடான புட்டு வைத்து அதன் மேல் இந்த கிரேவி போட்டு சாப்பிட்டா.. சும்மா செமையா இருக்கும்.. ஹெல்த்தியான உணவும் கூட.. ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ்!
நீங்க சாப்பிடுங்க.. நான் போய்ட்டு, நெக்ஸ்ட் இன்னொரு ரெசிபியோட உங்களை மீட் பண்றேன்.. ஓகேவா!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}