உங்கள் வீட்டில் தினமும் ஒரே மாதிரியான பொரியல் செய்து போர் அடிக்குதா.. சாம்பார் என்றால் அதற்கு காம்பினேஷன் பீன்ஸ் கேரட் பொரியல் தான். பருப்பு என்றால் அதற்கும் பீன்ஸ் கேரட் பொரியல் தான். இப்படியே சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போச்சா.. அப்ப குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி சொன்ன மாதிரியே பீன்ஸ் பொரியல் செய்து பாருங்கள். நாங்கெல்லாம் செஞ்சு பார்த்து சாப்பிட்டுட்டோம்.. டேஸ்ட் மிகவும் அற்புதமா இருக்கு. நீங்களும் அதே போல ட்ரை பண்ணி பாருங்க.
பீன்ஸ் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:

பீன்ஸ் -கால் கிலோ
வெங்காயம்-2
மிளகாய் வத்தல்- 3
வறுத்த நிலக்கடலை-சிறிதளவு
தேங்காய்-ஒரு பல்
கடுகு, உளுந்தம் பருப்பு- சிறிதளவு
எண்ணெய்- தேவையான அளவு
முதலில் பீன்ஸ் காயை பொடியாக அரிந்து கொண்டு வேக வைத்துக் கொள்ளவும். மற்றொருபுறம் மிக்ஸியில் தேங்காய், நிலக்கடலை பருப்பு, வத்தல், போன்றவற்றை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு வேக வைத்த பீன்ஸ்காய், உப்பு மஞ்சள் தூள், போட்டு நன்றாக கிளறவும். பின்னர் அரைத்து வைத்த மசாலா கலவையை அதனுடன் சேர்ந்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் ஆனதும் இறக்கவும். ஆரோக்கியமான வித்தியாசமான பீன்ஸ் காய் பொரியல் தயார். சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க..!
பீன்ஸ் காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
இயற்கையாகவே நார்ச்சத்து மிகுந்த காய் என்றால் அது பீன்ஸ் காய் தான். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். இதில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, ஆகிய சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. குறிப்பாக பீன்ஸ் விதை சிறுநீரக வடிவிலேயே உள்ளதால், இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிறுநீர் கற்களை அகற்ற பேருதவி புரிகிறது.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}