சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ். தோனி எஞ்சிய போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கியது முதலே கேப்டனாக இருந்து வந்தார் தோனி. 2024 தொடரில்தான் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகி, ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இருந்தாலும் தோனி தொடர்ந்து அணியில் இடம் பெற்றார். ஆனால் கடைசி ஓவர்களில்தான் அவர் களம் இறங்கினார். இதனால் அவர் பெரிய அளவில் ரன் எடுக்க முடியாத நிலையே நிலவி வந்தது.
ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் கூட, தோனி அணியில் இருக்கிறார், களத்திற்கு வருகிறார் என்பதே பெரிய சந்தோஷமாக இருந்து வந்தது. ஆனால் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் விதம் ஹார்ட் கோர் சென்னை அணியின் ரசிகர்களையே கடுப்பாக்கியுள்ளது. அந்த அளவுக்கு தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறது சென்னை அணி.
முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் பிறகு நடந்த 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியுள்ளது. பெங்களூர், ராஜஸ்தான், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என முக்கியமான தோல்விகளைத் தழுவிய சென்னை அணியின் செயல்பாடுகள் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளன.
அதேசமயம், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி இமாலய சேசிங்கில் ஈடுபட்டபோது 200 ரன்களைத் தாண்டி வந்து தோல்வியுற்றது. இப்போட்டியில் அணி வீரர்களிடையே சற்று மாற்றமும், நல்ல அதிரடியும் காணப்பட்டது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. அதிலும் தோனியின் அதிரடி ஆட்டமும் ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த நிலையில் வரப் போகும் போட்டிகளை அதிரடியாக வென்றாக வேண்டிய மிகப் பெரும் கட்டாயத்தில் சென்னை உள்ளது.
இந்தப் பின்னணியில் தற்போது கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ளார். இதனால் அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதில் தோனி, மிஞ்சியுள்ள போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் என்று தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அறிவித்துள்ளார்.
இது ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தோனி தலைமையில் சென்னை அணி அதிரடியாக ஆடி இறுதி வரை சென்று 6வது கோப்பையை கைப்பற்ற வேண்டும், கைப்பற்றும் என்று இப்போதே ரசிகர்களை களமாட ஆரம்பித்து விட்டனர்.
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}