சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என இப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி பின்னர் த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டோர் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்து வருகின்றனர்.
இதற்கிடையே தனது அடுத்த படமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கும் இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசருக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அந்த வகையில் கூலி படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டுகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேபோல் கமலஹாசனுக்கு விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதேபோன்று ரஜினிக்கும் இப்படம் சூப்பர் ஹிட் கொடுக்கும் எனவும் ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}