சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்... லாக்டவுன் வருமா.. கவலையில் மக்கள்!

Dec 14, 2023,01:22 PM IST

சிங்கப்பூர்: உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி சற்று ஓய்ந்த கொரோனா தற்பொழுது சிங்கப்பூரில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் லாக்டவுன் போடப்படுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.


வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அனைத்து நாட்டினர்களுக்கும் மரண பயத்தை காண்பித்து சென்றது தான் கொரோனா. முதன் முதலில் 2019ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவால்  ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம்.  ஒட்டுமொத்த நாடுகளையும் லாக்டவுன் போட்டு பூட்டி வைத்த காட்சியை உலகம் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.


கொரோனா பரவல் மற்றும் பல மாதங்கள் நீடித்த லாக்டவுன்களால், உலக நாடுகளின் பொருளாதார நிலை சரிந்தது. ஓவ்வொரு நாடும்  தனித்தீவு போலாகின. பல கஷ்டங்களை ஏற்படுத்திய கொரோனா ஓரளவிற்கு குறைந்து அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பியது. அவ்வப்போது ஆங்காங்கே அச்சம் காண்பித்து வந்த கொரோனா தற்பொழுது சிங்கப்பூரில் வேகமாக அதிகரித்து வருகிறது.




இது தொடர்பாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 32,035 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு பதிவான அதிகளவு பாதிப்பு. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு 28,410 பேர் பாதிக்கப்பட்டனர். தீவிர கிசிச்சை தேவைப்படும் கொரோனா நொயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என்று தெரிவித்திருந்தது.


மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தவும், வெளியே போகும்போது கட்டாயம் முகமூடி அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது,  உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.


சிங்கப்பூரில் தீவிரமாக கொரோனா பரவி வருவதால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூர் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டும், முகமூடிகளை அணிந்தும் வருகின்றனர். கொரோனா  அதிகரிப்பின் காரணமாக ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டாலும் படலாம் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். 


தற்போது பரவி வரும் கொரோனா பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த வைரஸ்கள் மனிதனின் உடலில் தங்கி மேலும், பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்