மதுரை அரசரடியில்.. சாலைப் பராமரிப்பு என்ற பெயரில் பொதுமக்கள் அவதி!

Mar 16, 2026,10:32 AM IST
மதுரை: மதுரை அரசரடி தமிழ்த் தென்றல் 3-வது தெருவில் நடைபெறும் முறையற்ற சாலைப் பணிகளால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 

இப்பகுதியின் திமுக கவுன்சிலரின் தந்தை கருப்பையா, அதிகாரப் பொறுப்பில் இல்லாத போதும், தனது மகனின் செல்வாக்கைப் பயன்படுத்தி சாலைப் பணிகளைத் தன் வசம் எடுத்துக்கொண்டு தரமற்ற முறையில் செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.





ஏற்கனவே ஓரளவு நன்றாக இருந்த சாலையில் உள்ள சிமெண்ட் செங்கல் கற்களை அகற்றி ஆங்காங்கே  வேறொரு இடத்தில் அடுக்கி வைத்து சேதப்படுத்திய அந்தச் சாலையில்   ஜல்லிக்கற்களை நிரப்பி அதன் மேல் ஏற்கனவே அகற்றி அடுக்கி வைத்த அதே பழைய சிமெண்ட்  கற்களைக் கொட்டிவிட்டு  சாலைப் பராமரிப்பு என்ற பெயரில் ஏனோ தானோ என்று அறைகுறை வேலை பார்த்து வருகிறார். 


பழைய கற்களைக் கொண்டே 'ஏனோ தானோ' எனச் செய்யப்படும் இந்த வேலையினால், முன்பு இருந்த சாலையைவிட இந்தச் சாலை இப்போது மிகவும் மோசமான நிலையில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் அலுவலகப் பணிக்குச் செல்வோர்கள் வயதானவர்கள் வரை பலரும் குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். 





சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடித்து, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் இவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? சாலைப் பணிகளைத் தரமாக முடித்துக் கொடுத்து மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா? என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

news

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

news

GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை

news

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு

news

ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்

news

சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்

news

பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி

news

Beautiful things don't ask for attention

அதிகம் பார்க்கும் செய்திகள்