ரீல்ஸ் எடுக்க ஐபோன் வாங்குவதற்காக குழந்தையை விற்ற பெற்றோர்

Jul 28, 2023,12:59 PM IST
கொல்கத்தா : ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ஐபோன் வாங்க பணம் தேவைப்பட்டதால் 8 மாத ஆண் குழந்தையை பெற்றோர்கள் விற்ற அதிர்ச்சி சம்பவம் மேற்குவங்கத்தில் நடந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜெயதேவ் மற்றும் சதி ஆகியோர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவர்களுடன் இருந்த 8 மாத ஆண் குழந்தையை காணவில்லை. 



அதே சமயம் அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படும் நிலையில் இருக்கும் இந்த தம்பதி சமீப காலமாக பெருத்த சந்தோஷமாக காணப்பட்டனர். காரணம் அவர்களது கையில் மின்னிய காஸ்ட்லியான ஐபோன்தான். சாப்பாட்டுக்கே சிரமப்படும் அவர்கள் திடீரென காஸ்ட்லியான ஐபோன் வைத்திருப்பது கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். 

இந்த ஜோடியோ, பல இடங்களுக்கு சென்று புதிதாக வாங்கிய ஐபோனில் வித விதமாக ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து வந்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அக்கம் பக்கத்தினர் குழந்தை பற்றி கேட்டுள்ளனர். முதலில் ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளிக்க நினைத்த அந்த தம்பதி, கடைசியாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். ஐபோன் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டதால் பணத்திற்காக மற்றொரு நபரிடம் குழந்தையை விற்று விட்டதாக தெரிவித்தள்ளனர். 

அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் அந்த தம்பதியை போலீசார் கைது செய்ததுடன், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் குழந்தையையும் மீட்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆண் குழந்தையை விற்றதுடன், அன்று இரவு பெண் குழந்தையையும் விற்க இந்த தம்பதி முடிவு செய்திருந்தது தெரிய வந்துள்ளது. பெற்ற பிள்ளைகளையே பணத்திற்காக விற்பனை செய்யும் இவர்கள் வேறு ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்