டெல்லி: பசுக் காப்பாளர்கள் என்ற போர்வையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இதே பசுக் காப்பாளர்களால் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே விரட்டி விரட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் பசுக் காப்பாளர்கள் என்ற பெயரில் பலர் இயங்கி வருகின்றனர். பசுக்களை இறைச்சிக்காக கொண்டு செல்வதைத் தடுப்பதே இவர்களது வேலை. இவர்களிடம் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள். இந்த நிலையில் பசுக் காப்பாளர்களிடம் சிக்கி ஒரு இந்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.
ஹரியானாவின் பரீதாபாத் மாவட்டத்தில் பிளஸ்டூ மாணவரான ஆர்யன் மிஸ்ரா என்பவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார். ஆர்யன் மிஸ்ராவும், அவரது நண்பர்கள் சாங்கி மற்றும் ஹர்ஷித் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்களை துரத்தி வந்தது. காரை மடக்கிய அந்தக் கும்பல், ஆர்யன் மற்றும் நண்பர்களிடம் காரை நிறுத்துமாறு கூறியது. ஆனால் ஏற்கனவே சிலருடன் பிரச்சினை இருந்ததால் அவர்கள்தான் ஆளை அனுப்பி தாக்க முயல்வதாக கருதிய ஆர்யன் மற்றும் நண்பர்கள் காரை நிறுத்தாமல் சென்றனர்.
இதையடுத்து அந்தக் கும்பல், ஆர்யன் நண்பர்களின் காரை துரத்திச் சென்றது. கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சேசிங் நடந்துள்ளது. ஒரு இடத்தில் வைத்து ஆர்யனின் காரை மடக்கிய கும்பல், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதில் ஆர்யன் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காருக்குள் இரண்டு பெண்களும் இருந்துள்ளனர். அதன் பின்னர் அந்தக் கும்பல் தப்பி ஓடி விட்டது.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து காரைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய அனில் கெளசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ், செளரப் ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையின்போது, ஆர்யன் மற்றும் அவரது நண்பர்கள் பசு மாட்டுக் கறியைக் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்து அதன் பேரில்தான் துரத்தினோம். அவர்கள் நிற்காமல் போனதால் உண்மையிலேயே அவர்கள் கடத்துவதாக நினைத்து துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டோம். ஆனால் காரில் பெண்கள் இருந்ததால் தவறான நபரைத் துரத்தி விட்டதாக அறிந்து ஓடி விட்டோம் என்று கூறியுள்ளனர்.
இந்தக் கும்பல் பயன்படுத்திய துப்பாக்கிகள் கள்ளத் துப்பாக்கிகளாகும். அனைத்தும் மேற்கு வங்கத்தில் வாங்கப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இதேபோலத்தான் மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் ஆட்டுக்கறி கொண்டு சென்ற இஸ்லாமிய இளைஞரை ஒரு கும்பல் மோசமான முறையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம். இந்த சம்பவத்தை வைத்து மத துவேஷத்தைப் பரப்ப வேண்டாம் என்று அந்த பெரியவர் பெருந்தன்மையுடன் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India at Paralympis 2024.. 29 பதக்கங்களுடன் அட்டகாசமாக நிறைவு செய்த தீரர்கள்.. சபாஷ் இந்தியா!
பதிவு செய்யப்பட்ட கட்சின்னா என்ன.. தமிழக வெற்றிக் கழகம் போல.. தமிழ்நாட்டில்.. எத்தனை கட்சி இருக்கு?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.. விஜய் சொன்ன ஹேப்பி நியூஸ்!
மனசிலாயோ.. கோட் பட பாணியில் அதிரடி காட்டும் வேட்டையன்.. அது மலேசியா வாசுதேவன் குரலேதான்!
Welcome Baby Girl.. தீபிகா படுகோன் - ரன்வீர்.. தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.. தாயும் சேயும் நலம்!
ஓவர் லீவு.. புதிய வரலாறு படைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. மொத்தம் 532 நாட்கள்!
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வருகிறதா?.. தீவிரமாக களம் குதித்த இந்தியா.. திடீர் திருப்பம்!
செப்டம்பர் 08 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
துலாம் ராசிக்காரர்களே.. சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய காலம்
{{comments.comment}}