ஜார்க்கண்ட் மாநில ஆளுநரானார் சி.பி. ராதாகிருஷ்ணன்.. 13 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள்

Feb 12, 2023,09:55 AM IST
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவரும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வெளியிட்டார். திரவுபதி முர்மு குடியரசுத் தலைவரான பிறகு நடைபெறும் முதல் ஆளுநர்கள் நியமனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மூத்த பாஜக தலைவர்  ஆவார். தமிழ்நாடு பாஜக தலைவராக  இருந்துள்ளார். 2 முறை லோக்சபா உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கு தற்போது ஆளுநர் பதவியை அளித்துள்ளது மத்திய அரசு.

தனக்கு கிடைத்துள்ள இந்த ஆளுநர் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகவும், தன்னை ஆளுநராக நியமித்த அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இல.கணேசன் இடமாற்றம்

மணிப்பூர் ஆளுநராக இருந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரும் முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர்  ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.



மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த பகத் சிங் கோஷியாரி தன்னை அந்தப் பதவியிலிருந்து விடுவிக்குமாறு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அதை ஏற்று அவருக்குப் பதில் மகாராஷ்டிராவின் புதிய ஆளுநராக ரமேஷ் பயஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நியமனம் செய்யப்பட்ட பிற ஆளுநர்கள்:

லெப்டினென்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் - அருணாச்சல் பிரதேசம்
லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா - சிக்கிம்
குலாப்சந்த் கட்டாரியா - அஸ்ஸாம்
சிவ பிரதாப் சுக்லா - இமாச்சல் பிரதேசம்
ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நஸீர் - ஆந்திரப் பிரதேசம்
பிஸ்வா பூசன் ஹரிசந்தன் - சட்டிஸ்கர்
சுஷ்ஸ்ரீ அனுசியா உய்க்கே - மணிப்பூர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - பீகார்
பகு சவுகான் - மேகாலயா
துணை நிலை ஆளுநர் பிரிகேடியர் டாக்டர் பிடி மிஸ்ரா - லடாக்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்