சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை தேர்வு செய்யப்படவுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் மதுரையில் சு. வெங்கடேசனும், கோயும்புத்தூரில் நடராஜனும் போட்டியிட்டு வென்றனர். இந்த முறை கோவைக்குப் பதில் திண்டுக்கல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு யார் என்பது முடிவு செய்யப்படும்.

மதுரையில் மீண்டும் சு. வெங்கடேசனே போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது. காரணம், அவர் மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளார். மதுரையைத் தாண்டி தமிழ்நாடு முழுவதும் பாப்புலரான நபராகவும் மாறி நிற்கிறார் சு. வெங்கடேசன். எனவே மீண்டும் மதுரையில் அவரே வேட்பாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல்லில் இரண்டு, மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் பாலபாரதியின் பெயர் பலமாக அடிபடுகிறது. அவர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். சிறந்த செயல்பாட்டாளராக அறியப்பட்டவர். அவருக்கு சீட் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
{{comments.comment}}