சென்னை: இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர் தவெக தலைவர் நடிகர் விஜய் உருவத்தை தனது தோள்பட்டையில் டாட்டூவாக குத்தியுள்ளது வைரலாகியுள்ளது.
விஜய் என்றால் 6 வயது முதல் 60 வயது வரை கிரேஸாக உள்ளவர்கள் அதிகம். விஜய் வெளியில் வந்தாலே திருவிழா போல கூட்டம் கூடி வருகிறது. நடிகராக இப்படி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வரும் விஜய் இப்போது அரசியல்வாதியாகவும் மாறியுள்ளார். ஒவ்வொரு இடத்திற்கும் யோசித்து யோசித்துதான் அவர் செல்கிறார். காரணம் அந்த அளவுக்கு இவரைப் பார்க்க கூடும் கூட்டம்தான்.

இப்படிப்பட்ட விஜய்க்கு எல்லாத்துறை பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் கிரிக்கெட்டிலும் பலர் இவரது ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக உள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானவர் வருண் சக்கரவர்த்தி. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி அபாரமான பந்துவீச்சாளர். ஸ்பின் பந்தில் கலக்கி வரும் இவர் நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராவார்.
விஜயை ரோல் மாடலாக கருதும் இவர் ஒவ்வொரு பேட்டியிலும் விஜய் குறித்து பேசுவார். விஜய்யின் பஞ்ச் டயலாக் குறித்தும் அவ்வப்போது பேசுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு விஜய்யை நேரில் சந்தித்த போது பல புகைப்படங்களை எடுத்து அவற்றை இணையத்திலும் பகிர்ந்துகொண்டார். இப்போது இங்கிலாந்து தொடரிலும் வருண் சக்கரவர்த்தி அசத்தி வருகிறார்.

இந்நிலையில்,அவர் பயிற்சி மேற்கொண்டபோது அவரது வலது கையில் விஜய்யின் உருவத்தை டாட்டூவாக குத்தியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த தலைவா படத்தில் வரும் பிரபலமான விஜய்யின் போஸை அவர் பச்சையாக குத்தியுள்ளார். இந்த படம் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.
வருண் சக்கரவர்த்திக்கு இயக்குநராகும் ஆசையும் உள்ளதாம். தன்னிடம் சூப்பரான ஒரு கதை உள்ளதாகவும், அதை விஜய் கேட்டு நடிக்க முன்வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் வருண் சக்கரவர்த்தி. ஆனால் விஜய் இப்போது அரசியலுக்குள் புகுந்து விட்டதால் இந்தக் கதையை சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்
தகவலும் சமையலும்.. நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி!
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
பராசக்தி படத்தில் அறிஞர் அண்ணாவின் முழக்கங்கள் நீக்கம்...சென்சார் போர்டு அதிரடி
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தவெக.,வின் ஆட்சியில் பங்கு ஆஃபர்...திருமாவளவன் விமர்சனம்
என் இதயத்தில் கலந்த தோழியே.. நன்றி!
{{comments.comment}}