சென்னை: நாம் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே, நடிகர்களோ, சூப்பர் ஸ்டார்களோ அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள், நாம் சாதாரண மக்களை ஒத்திருக்க வேண்டும், சாதாரண மக்கள் தங்களை நம்முடன் ஒப்பிடும்படியாகவே நாம் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஒரு யூடியூப் சேனலுக்கு அஸ்வின் பேட்டி கொடுத்துள்ளார். அதில், கிரிக்கெட் விளையாட்டு குறித்தும், கிரிக்கெட் வீரர்கள் மீதான கிரேஸ் குறித்தும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அஸ்வின் பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு விஷயங்கள் முதலில் இயல்பான நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் சூப்பர் பிரபலங்கள் போன்ற கலாச்சாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். இதை ஊக்குவிக்கக் கூடாது. முன்னோக்கிச் செல்கையில் இந்திய கிரிக்கெட்டில் அனைத்தையும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
நாம் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே, நடிகர்களோ, சூப்பர் ஸ்டார்களோ அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள், நாம் சாதாரண மக்களை ஒத்திருக்க வேண்டும், சாதாரண மக்கள் தங்களை நம்முடன் ஒப்பிடும்படியாகவே நாம் இருக்க வேண்டும். உதாரணமாக விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா என்றால் அவர்கள் நிறைய சாதித்து விட்டனர்.
எனவே அவர்கள் இன்னுமொரு சதம் எடுக்கிறார்கள் என்றால் அது ஏதோ இனி உங்கள் சாதனையல்ல. அது வழக்கமானது, நம் லட்சியங்கள், இலக்குகள் இந்த சாதனைகளை விட பெரியதாக இருக்க வேண்டும். சாம்பியன்ஸ் டிராபிக்காக 5 ஸ்பின்னர்களா? இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து ஆல்ரவுண்டர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்களா? ஆகவே ஹர்திக் பாண்டியாவும் ஆடப்போகிறார், ஜடேஜா, அக்சர் படேலும் ஆடுவார்கள், குல்தீப் யாதவும் இருப்பார்.
இந்நிலையில் வருண் சக்ரவர்த்தியைச் சேர்க்க வேண்டுமெனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை உட்கார வைத்து விட்டு ஹர்திக் பாண்டியாவை 2வது வேகப்பந்து வீச்சாளராகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் ஸ்பின்னர் ஒருவரை ட்ராப் செய்து விட்டு 3வது வேகப்பந்து வீச்சாளைரக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அஸ்வின்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}