தீவிர புயலாகவே கரையைக் கடந்தது.. டானா.. தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில்.. இன்று மழைக்கு வாய்ப்பு!

Oct 25, 2024,10:53 AM IST

சென்னை: வங்க கடலில் நள்ளிரவு 1.30 மணி அளவில்  டானா புயல் தீவிர புயலாகவே கரையைக் கடந்தது. இதற்கிடையே தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக  கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த தொடர் மழை காரணமாக  இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார். அதேபோல் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. 


மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், தும்பை வளைவு, அண்ணா நகர், அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பரங்குன்றம், செல்லூர், பனங்காடி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக சுமார் ஒன்றரை மணி நேரமாக இடி மின்னலுடன் கூடிய  கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இந்த கனமழை எதிரொலியாக பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மதுரை வந்த இன்டிகோ பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல் சுமார் 40 நிமிடமாக வானில் வட்டமிட்டது. பின்னர் மழை சற்று ஓய்ந்ததும் 50 பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கியது.




அதேபோல் திண்டுக்கல், கும்பகோணம், சுவாமிமலை, அரியலூர், காரைக்குடி, உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


இந்த நிலையில் வங்கக்கடலில் வலுப்பெற்ற டானா புயல் வடக்கு ஒடிசாவின் தாம்ப்ரா மற்றும் மேற்கு வங்கத்தின் பிதர்கணிக்கா இடையே  நள்ளிரவு 1:30 மணிக்கு தீவிரப் புயலாகவே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சூறாவளி காற்று 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில்  வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்தன. மேலும் 5 மணி நேரத்திற்கு மேலாக புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதற்கிடையே  தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை, நாளை மறுதினம் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று கன மழை: 


நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்