சென்னையில் இருந்து 350 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம்!

Nov 29, 2025,05:30 PM IST

சென்னை:  சென்னையில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அவர்கள் 60 வகையான பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.


இந்த புயல் காரணமாக நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததினால், அப்பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருகிறது.




தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு -வடமேற்கில் நகர்ந்து 30ம் தேதி வட தமிழகம், புதுவை மற்றும் ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ., தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நகர்ந்து வருகிறது. வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் இருக்கிறது. டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து 60 கி.மீ., 50 கி.மீ., 25 கி.மீ. என மையம் கொள்ளும்.


நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ. தூரத்தில் புயல் நிவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்