சென்னை: ஃபெஞ்சல் புயலானது மெதுவாக கரையைக் கடக்கும் என்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக நேரம் பலத்த மழை பெய்யும். புயல் இரவில் கரையைக் கடக்க ஆரம்பிக்கும். நள்ளிரவில் மிக பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் கொடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மீது தற்போது அடர்த்தியான மேகக் கூட்டம் பரவியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு இது நீடிக்கும். புயல் மெதுவாக நகருகிறது என்பதால் இந்த நான்கு மாவட்டங்களிலும் அடர்த்தியான மழை, நீண்ட நேரம் பெய்யும் வாய்ப்புள்ளது.
இரவிலிருந்து காலை எட்டரை மணி வரையிலான காலத்தில் 60 முதல் 120 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துல்ளது. அடுத்த 12 முதல் 18 மணி நேரம் முக்கியமானது.
சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் முதல் மகாபலிபுரம் இடையிலான பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் புயல் கரையைக் கடக்கும். எப்போது அது கரையைக் கடக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். அனேகமாக இரவில் கரையைக் கடக்க ஆரம்பித்து நள்ளிரவில் அதாவது டிசம்பர் 1ம் தேதி அதிகாலையில் புயல் கரையைக் கடந்து முடியும். புயல் கரையைக் கடந்து முடியும் வரை கன மழை நீடிக்கும். புயல் மெதுவாக கடந்தால் மழையும் நீடிக்கும்.
இன்று மாலை அல்லது இரவிலிருந்து காற்று வேகம் பிடிக்கும் மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் அளவுக்கு காற்று இருக்கும். இது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் அடுத்த 12 முதல் 18 மணி நேரம் வரை கன மழை இருக்கப் போகிறது. அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!
ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
{{comments.comment}}