சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக நாளை சென்னையில் மிக கன மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று முதல் 30ம் தேதி அரும்பாக்கம் மற்றும் செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை பார்க் செய்ய வேண்டாம் என்று மெட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயலானது நாளை பிற்பகல் வாக்கில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழையானது ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மக்களும், அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். சென்னை மெட்ரோ நிறுவனமும் பயணிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இதற்கு முந்தைய அனுபவங்கள் கொடுத்துள்ள படிப்பினையின்படி, செயின்ட் தாமஸ் மெளன்ட் மெட்ரோ மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களின் பார்க்கிங்கில், 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள். வானிலை நிலவரத்திற்கு ஏற்ப இந்த தேதியில் மாற்றங்கள் இருக்கும். அவை பின்னர் அப்டேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கும் என்பதால் இங்கு வாகனங்களைப் பார்க் செய்வதைத் தவிர்க்குமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}