சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ள நிலையில், நாகை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்யக்கூடும். அதே சமயம் சென்னையில் நேற்று பெய்த மழை போல் இன்று பெய்யாது. மிதமான மழைக்கே வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதிப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் மழை தொடர்வதால் வெயில் இல்லாமல் குளுமையான சூழல் நிலவு வருகிறது. அதே சமயம் சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து நகரமே குளிர்ந்து நடுங்குகிறது.
நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் கடல் அலைகள் பெரும் சத்தத்துடன் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதேபோல் திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், நெல்லை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தமிழ்நாட்டை நெருங்கும் நிலையில் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம், கல்பாக்கம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் பெரும் சத்தத்துடன் 12 உயரம் வரை எழுகின்றது.நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8000 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 1500 க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மழை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். அதன்படி, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அதி கன மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலில் அதிக கன மழை பெய்யும். புதுச்சேரியில் மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை நேற்று போல் மழை இருக்காது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}