சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படு தாமதமாகி வருகிறது. இன்று மாலை முதல் நாளை காலைக்குள் ஃபெங்கல் புயலாக அது வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக நகர்ந்து வந்தது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களை ஒட்டிய கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதேசமயம் நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், காரைக்கால், சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து புயல் உருவான பிறகு மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென புயலின் வேகம் மிக கணிசமாக குறைந்து மாலை நேரத்தில் மூன்று கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரம் வேகம் முற்றிலும் குறைந்து தொடர்ந்து ஆறு மணி நேரமாக ஒரே இடத்தில் நீடித்து வந்தது. இதனால் புயல் உருவாகுவதில் தாமதமானது. இதன் எதிரொலியாக மழையின் அளவு குறைந்து ஒரு சில இடங்களில் மிதமான மழையே பெய்து வந்தது.
இந்த நிலையில் ஃபெங்கல் புயல் குறித்த லேட்டஸ்ட் அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் மிக மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரியில் இருந்து 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 480 கிலோ மீட்டர் தெற்கு தென்கிழக்கிலும், நாகைக்கு 310 கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு 110 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற கூடும் என கணித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில், சில சமயம் 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் வீட்டுக்கூரை சூரிய மின்சக்தி திட்டம்
ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!
வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது
முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினோம்: செல்வப்பெருந்தகை பேட்டி
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி.. அனைத்து விலைகளும் உயரும் அபாயம்!
வின்டோஸ் அப்டேட் குழப்பத்தால்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து.. சேவைகளில் தாமதம்
அமெரிக்காவை அதிர வைக்கும் Bomb Cyclone.. பல ஊர்களை பனி மூடியது!
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்
ரூ. 93,000க்கு வாங்கிய காரின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}