சர்வதேச மகளிர் தினத்தை எந்த தீமில் கொண்டாடினோம் தெரியுமா?

Mar 12, 2026,12:44 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


இந்த வருடம் 20 26 சர்வதேச மகளிர் தினம் அறிவித்திருந்த கருப்பொருள் "Give to Gain" (தீம் -theme) எதனை? ஊக்குவிக்கிறது என்பதை  சர்வதேச மகளிர் தினம் சிறப்புகள் எனும் தலைப்பில் காண்போம் ...


W  -  Wonderful strength.

O  -   Outstanding in Courage.

M -  Motivating everyone around.

A - Amazing in  every role.

N - Noble at heart.


பெண்:


மென்மையும், வலிமையும் ஒருசேரப் பெற்றவள். பெண்  அடுக்குளை  முதல் விண்வெளி வரை சாதனை படைக்கும் பெண்களை கௌரவிப்பதற்காகவே "மகளிர் தினம் "ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது.


இலக்கிய பெண்மைக்கு இலக்கணம் நீ என வாழ்ந்து காட்டும் பெண்களுக்காக இந்த வருடம் மகளிர் தின கருப்பொருள் "கிவ் டு கெயின் "Give To Gain" அதாவது கொடுத்து ஆதாயம்பெறு,பரஸ்பர உதவி. பெண்களின் முன்னேற்றத்திற்காக ஆதரவை வழங்குங்கள் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வளர்ச்சி மற்றும் அதிகாரம் அளித்தலுக்கு தாராள மனப்பான்மையுடன், ஒத்துழைப்புடனும் ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியத்தை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.




"கிவ் டு கெயின்" எனும் இந்த கருப்பொருள் எதனை ஊக்குவிக்கிறது...


பெண்கள் கல்வி,கலை, கலாச்சாரம், தலைமைத்துவம், தொழில் முனைவர் மற்றும் அரசியல் இவற்றில் வெற்றியாளர்களாக விளங்குகின்றனர். இவ்வாறு அனைத்து துறைகளில் வெற்றியாளராக விளங்கும் போது அது தனிப்பட்ட ஒருவரை மட்டும் சாராது. ஒட்டுமொத்த முழு சமூகத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது.அந்த சமூகமே வலுவடைகிறது.


"Give  To Gain" எனும் கருப்பொருள் பரஸ்பர உதவி என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.அதாவது ஒரு பெண் குழந்தைக்கு அளிக்கும் கல்வியானது அவளை மட்டும் சாராமல் அவளுடைய குடும்ப உறுப்பினர்கள்  மற்றும் அவளைச் சார்ந்த சமூகத்தையே செழிப்படைய செய்கிறது. இதனால் ஒட்டுமொத்த சமூகமும் செழிப்படைகிறது.இது ஒரு கூட்டு வெற்றிக்கான முயற்சி என்று இந்த கருப்பொருள் ஊக்குவிக்கிறது.


மேலும் ஐக்கிய நாடுகள் சபை 20 26 ஆம் ஆண்டிற்கான தனது மையக் கருத்தாக - Rights, Justice, Action, For All Women and Girls"   -  "உரிமைகள், நீதி, நடவடிக்கை,அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக " இந்த மையக்கருத்து பெண்களுக்கு தடையாக இருக்கும் சமூக மற்றும் சட்ட ரீதியான தடைகளை அகற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது. அரசாங்கங்களும், நிறுவனங்களும் பெண்களின் முன்னேற்றத்தில் உண்மையான முதலீடுகளை செய்ய வேண்டும் என்பதை இந்த மையக்கருத்து வலியுறுத்துகிறது.


மகளிர் தினம் கொண்டாடுவதன் முக்கியத்துவம் யாதெனில் 1900 களில் தொடக்கத்தில் பெண்களின் வாக்குரிமை மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்த கோரி போராட்டங்கள் தொடங்கப்பட்டன. பிறகு, 1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மகளிர் தினம் என்பதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இதனைத் தொடர்ந்து நாம் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் மார்ச் மாதம் எட்டாம் தேதி பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கும், அவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளை ஒழிக்கவும்,சம ஊதியம் வழங்கவும்,அனைத்து துறைகளிலும், குடும்பங்களில் குடும்பத் தலைவிகளாக ஜொலிக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக அனைவரும் கொண்டாடி வருகின்றோம்.


ஒரு நாள் மட்டும் அல்லாமல் வருடம் முழுவதும் மகளிர் தினமாக பெண்களைப் போற்றி கொண்டாடுவோம். இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்