சென்னை: ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் புகுந்தால் அதனை அப்புறப்படுத்த தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான ஃபெங்கல் புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. அதே நேரத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, நாகை, திருவள்ளூர்,கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் அடி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூரில் மழையின் அளவு குறைந்துள்ளது. ஏனெனில் புயலின் நகர்வு கடலூரை விட்டு விலகிச் சென்றதால் புயல் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் பரவலாக எல்லா பகுதிகளிலும் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கீழ்த்தலத்தை விட்டு மாடியில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அதேபோல் தாம்பரம் அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்துள்ளதால் நோயாளிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். ஓட்டேரி ஸ்டீபன் சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இப்பகுதிகளில் செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அதே சமயத்தில் மக்கள் நடந்து செல்லவும் முடியாத வகையில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மந்தவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இது தவிர தொடர் கனமழை காரணமாக மதுரவாயில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கூவம், மதுரவாயல், திருவேற்காடு போன்ற கரையோர பகுதிகளில் வாசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை தொடர்வதால் ஏரிகளும் ஆறுகளும் நிறைந்து மழை நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது.இந்த தண்ணீர் வீடுகளுக்கும் புகுவதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வரும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்தால், 044 -2220 0335 மற்றும் 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள தமிழக அசு அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்
ஊரெல்லாம் உன்னைக் கண்டு.. நயன்தாராவுக்கு.. விக்கி அளித்த பர்த்டே கிப்ட் என்ன தெரியுமா??
வானம் அருளும் மழைத்துளியே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 19, 2025... இன்று கார்த்திகை மாத அமாவாசை
வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
{{comments.comment}}