மெல்ல நகர்ந்து வரும் புயல் சின்னம்.. நாளை மறுநாள் தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த புயல் சின்னம் நகராமல் ஒரே இடத்தில் நீடித்திருந்ததால் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டு மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வந்தது. 



இந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் மீண்டும் நகர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை, நாகை, கன்னியாகுமரி, திருவாரூர், ராமநாதபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை ஒட்டி உள்ள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டாலும், மாநகர் முழுவதும் தரை காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற உள்ளது. மேலும் இந்த புயல் நாளை மறுநாள் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 20 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . 

 ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் நாளான, 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‌

அதேபோல் ஆந்திராவிலும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய கூடும் என்பதால் ஆந்திராவுக்கு 29,30 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று மிக கனமழை:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

news

திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி

news

10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!

news

நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்