சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட உள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலக் காரணமாக சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு நவம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 590 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னைக்குத் தெற்கு தென்கிழக்கு திசையில் 800 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு தென்கிழக்கில் 710 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை நிலவரப்படி,மணிக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. தற்போது இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை புயலாக வலுப்பெற கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை உருவாகும் இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.
புயலாக மாறிய பின்னர் தொடர்ந்து இலங்கை கடற்கரையைத் தொட்டிபடி, வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு கடற்கரை பகுதியை நோக்கி புயலானது நகரக்கூடும். தமிழ்நாட்டை நோக்கி புயல் நகரக் கூடும் என்பதால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழைக்கான வாய்ப்புள்ளது.
4 மாவட்டங்களில் மிக கன மழை
சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களிலும் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
புயல் உருவாகவுள்ளதால் மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. நாகப்பட்டனம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேசியப் பேரிடர் படையினர் அனுப்பப்படவுள்ளனர். மேலும் காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் அங்கு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மழை மற்றும் புயல் மீட்பு ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}