சென்னை: ஃபெஞ்சல் புயல் வட தமிழ்நாட்டை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில், நாளை பள்ளிக்கு வருவதற்குத் தயாராக இருக்குமாறு சென்னையைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்று தனது மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பியிருப்பது அதிர வைத்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கவுள்ளது. இதனால் நாளை சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவைக் கூட மூடச் சொல்லி விட்டார்கள்.
பீச் ரோட்டுக்கும் பூட்டு போட்டாச்சு. பூங்காக்களையும் மூட உத்தரவிடப்பட்டு விட்டது. இப்படி அரசு முதல் மக்கள் வரை எல்லோரும் ஒரு பக்கம் பாதுகாப்புக்கு உத்தரவாதங்களை ஏற்படுத்தி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சைதன்யா தனியார் பள்ளி ஒன்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்துள்ளது.
தனது மாணவர்களுக்கான வாட்ஸ் ஆப் குரூப்பில் அது அனுப்பியுள்ள செய்தியில், பெற்றோர்களே.. நாளை வானிலை சூழலுக்கேற்ப தகவல்கள் அப்டேட் செய்யப்படும். தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். அதற்கேற்ப மாணவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கல்விக்கும், ஏற்கனவே திட்டமிட்டவற்றுக்கும் முக்கியத்துவம் தரப்படும். அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் காலை 7 மணிக்கு முன்பே அப்டேட் செய்யப்படும். உங்களது ஆதரவையும், ஒத்துழைப்பையும் எதிர்நோக்கியுள்ளோம் என்று அந்தப் பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை அதி கன மழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகமும் விடுமுறை அறிவித்து விட்டது. யாரும் வெளியே வராதீங்க என்று அரசும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்தப் பள்ளி மட்டும் புயலைப் பற்றிக் கவலைப்படாமல் பள்ளிக் கூடத்திற்கு வருவதற்குத் தயாரா இருங்க, பரீட்சை முக்கியம் என்று கூறியிருப்பது வினோதமாக உள்ளது. இந்த அறிவிப்பால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையில்லாத குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
புயலைப் பத்திப் பயப்படுவோமா.. இல்லை பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு ரெடி செய்வோமா என்று மன உளைச்சலும் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}