சென்னை: ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று மாலை அவர் அளித்த பேட்டி:
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது மணிக்கு 10 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு 270 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகைக்கு 260 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரி அருகே நாளை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் அளவிலும் சில நேரங்களில் 90 km அளவிலும் பலத்தை தரைக்காற்று வீசும்.

மழைப் பொழிவுக்கான வாய்ப்புகள் (எல்லா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மற்றும் பரவலாக மழை பெய்யும்)
29ஆம் தேதி
(ரெட் அலர்ட்) - செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிக கன மழை பெய்யும்
(ஆரஞ்ச் அலர்ட்)
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் அரியலூர் தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
(எல்லோ அலர்ட்)
திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும்
30ஆம் தேதி
(ரெட் அலர்ட்)
சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் மற்றும் புதுச்சேரியில் அதிக கனமழை பெய்யும்.
(ஆரஞ்ச் அலர்ட்)
ராணிப்பேட்டை திருவண்ணாமலை வேலூர் பெரம்பலூர் அரியலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.
(எல்லோ அலர்ட்)
திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை கரூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
டிசம்பர் 1ஆம் தேதி
(ஆரஞ்ச் அலர்ட்)
நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
(எல்லோ அலர்ட்)
கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் கரூர் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதி
நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் தேனி திண்டுக்கல் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!
ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்
ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு
பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
{{comments.comment}}