ஆழ்ந்த காற்றழுத்தம் எப்போது புயலாக மாறும்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தரும் விளக்கம் இதுதான்!

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை:  வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக வலுப்பெற கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவித்துள்ளார்.


தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழ்நாட்டின் நோக்கி  2 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது இது மட்டுமல்லாமல் பலத்து தரைகாற்று வீசுவதால் கடல் அலைகள் நீண்ட உயரத்திற்கு எழுகின்றன. 


இதனால் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் முழுமையான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில்  புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




இந்த நிலையில் ஃபெங்கல் புயல் நிலவரம் குறித்த அறிவிப்பு ஒன்றை டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:


இன்று காலை 11:30 மணி நிலவரப்படி புயல் சின்னம் நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 450 கிமீ தொலைவிலும் வட இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது. இப்புயல் சின்னம் அடுத்த 6 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக மாறுகிறது.


டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது.


நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், மாவட்டங்களில் நாளை (நவம் 28) காலைக்குள் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், வட மாவட்டங்களிலும் மாலை முதல் விட்டு விட்டு மழை எதிர்ப்பார்க்கலாம். அவ்வப்போது கனமழையாக இருக்கும். இப்புயல் சின்னம் நவம்பர் 30ம் தேதி சென்னை மற்றும் நாகப்பட்டினம் இடையே புதுச்சேரி, கடலூரை மையமாக வைத்து கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதன் காரணமாக நவம் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பரவலாக மிக மழை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார் ஹேமச்சந்தர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

news

இட்லிக்கடை.. ஒரு நிமிடக் கதை (36)

news

தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று சந்திக்கிறார் முதல்வர் விஜய்: காரணம் இது தானா?

news

ஞானத்தின் தெளிவு!

news

காலம் மறைத்தாலும் என்றும் நம் மனதில் இருந்து மறையாத கலாம்!

news

North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்