சென்னை: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் தொடரும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2026-2027ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் இந்த பட்ஜெட் உரையை 2.30 மணி நேரம் இன்று தாக்கல் செய்தார். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த உடன் அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை சட்டசபை கூடும் என தெரிவித்தார். இந்நிலையில் சட்டசபை நடைபெறும் நாட்கள் குறித்த விபரங்களை சபாநாயகர் தற்போது அறிவித்துள்ளார்.
சட்டமன்ற நேர அட்டவணை மற்றும் முக்கிய அம்சங்கள்:

காலை அமர்வு: சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள் தினமும் காலை 9.30 மணிக்கு தொடங்கி, மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.
பட்ஜெட் மீதான விவாதம்: தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விரிவான விவாதங்கள் ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெறும்.
மாலை அமர்வு குறித்த ஆலோசனை: பேரவை நடவடிக்கைகளை மேலும் திறம்பட நடத்த மாலை வேளையிலும் கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பேரவையை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் மாலை கூட்டம்: மக்கள் நலன் சார்ந்த முக்கிய மசோதாக்கள் மற்றும் மானியக் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க தேவைப்பட்டால், மாலை நேரத்திலும் சட்டமன்றப் பேரவை கூட்டப்படலாம் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
விரிவான விவாதங்களுக்கு முன்னுரிமை:
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிப் பிரச்சனைகள் மற்றும் பட்ஜெட் மீதான கருத்துக்களைப் பதிவு செய்வதற்குப் போதிய கால அவகாசம் வழங்கும் வகையில் இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் இந்த கூட்டத்தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என்பதால், பல்வேறு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் முக்கியச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றக் கூட்டத்தொடர் செப்டம்பர் 8 வரை திட்டமிடப்பட்டிருப்பது, மக்கள் சார்ந்த கோரிக்கைகள் மீது விரிவான விவாதம் நடத்துவதற்கு உறுப்பினர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.
காலை காபியும் காதலும்
பாக்கு வெத்தல மாத்த வா
இயற்கையின் மடியிலே!
இரட்டைப் பின்னல் இந்திரா
The Five-O’Clock Surprise
செப்டம்பர் 8 வரை சட்டமன்றக் கூட்டம் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
பட்ஜெட் பூஜ்ஜியம்...மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
Santhi Sinnathambi Poem: விடுமுறைக்காகக் காத்திருந்தோம்.. காத்திருந்தோம்!
பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்
{{comments.comment}}