- அ.தாமஸ்
பண்புகளில் தலையாயது தலைமைப் பண்பு, அறிந்த ஒன்றை அறியாதவருக்கு அடையாளப்படுத்தி வழிகாட்டுங்கள். அறியாத ஒன்றென்றால், அறியாத பலரும் பின்தொடரும் நிலையில், நீங்களே வழிநடத்துங்கள், அந்நிலையில் முன்மதியையும் தற்காப்பையும் உமதாக்குவதில் உறுதியாய் இருங்கள்.
அறியாத ஒன்றை விரைந்து அறிவதில் முனைப்புக் காட்டுவதோடு, அதனைத் தெளிந்து அந்நிலையில் உங்களை வளர்ப்பதோடு பிறரையும் தகுந்த விதத்தில் வளர்த்திடும் வழிவகை காணுங்கள்.
நீங்கள் நம்பிய கை உங்களை கைவிட்டாலும் உங்களின் நம்பிக்கையை கைவிடாதீர்கள். அப்பொழுதுதான் அது உங்களை நம்பியவர்களின் கரங்களைப் பற்றி வெற்றியடையச் செய்யும் அரிய வாய்ப்புகளை உங்களுக்கு அடையாளப்படுத்தும்.

நீங்கள் தோற்றுப் போவதில் மனம் தளராது அதில் கற்றுக் கொள்வதில் கவனமாய் இருந்தால் நாளைய வெற்றி உங்களையே அதன் அடையாளமாக்கும்.
இன்றைய உறவுகளின் முதன்மைத் தேவையே சரியான வழிகாட்டுதல் தான். இதற்கு அனுதாபங்களை விட அனுபவமே அவசியமாகிறது. எனவே அறிந்திடுங்கள்! தெளிந்திடுங்கள்! துணிந்திடுங்கள்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}