ஃபெஞ்சல் புயல் மழை எதிரொலி.. சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரிப்பு

Nov 30, 2024,01:15 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.


ஃபெஞ்சல் புயல் தற்போது சென்னைக்கு 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்கள் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது . சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது மட்டுமல்லாமல் பலத்த காற்று வீசி வருகிறது. 




தொடர் மழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போதை நிலையில் விநாடிக்கு கிட்டத்தட்ட 5000 கன அடிநீர் அளவுக்கு வந்து கொண்டுள்ளது. காலையில் இது 1000க்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் உள்ளனர்.


இந்த நிலையில் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி சென்னையில் எவ்வளவு மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது  என்ற விவரம்:


சென்னை கத்திவாக்கத்தில் அதிகபட்சமாக 121.2 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. பேசின்பாலத்தில் 94.2 மி.மீட்டர் மழையும், தண்டையார்பேட்டையில் 88.2 மி.மீட்டர் மழையும், சோழிங்கநல்லூரில் 86.4 மி.மீட்டர் மழையும், தண்டையார்பேட்டை ஜிடி மருத்துவமனையில் 85.4 மி.மீட்டர் மழையும், பொன்னேரியில் 83 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


அதேபோல் சென்னை அருகம்பாக்கத்தில் 78.8 சென்டிமீட்டர் மழையும்,  மணாலியில் 78.6 மி.மீட்டர் மழையும், ஐஸ் ஹவுஸில் 78 மி.மீ மழையும்,சென்னை சென்ட்ரலில் 77.4 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

news

புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!

news

நான் கம்ப்யூட்டர் கற்ற கதை

news

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்