புயல்.. டிச. 4.. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Dec 02, 2023,05:59 PM IST

செங்கல்பட்டு/திருவள்ளுர்: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மிச்சாங் புயல் வருவதால் அதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க ஆரம்பித்துள்ளன. இந்தப் புயலானது, வட மாவட்டங்களைத்தான் அதிகம் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து சென்னை மாநகராட்சி ஏற்கனவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு அது உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பான முறையில் கட்டி வைக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.


அதேபோல தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலெர்ட்  விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,  அடுத்த 24 மணி நேரத்தில்  புயலாக உருவாகிறது. இந்தப் புயலானது, நெல்லூர், மசூலிப்பட்டனம் இடையே டிசம்பர் 5ம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்