முதல் முறையாக.. முழுமையான நாயகியாக.. தமிழில் கலக்கத் தயாராகும் தர்ஷனா ராஜேந்திரன்!

Dec 02, 2023,05:30 PM IST
சென்னை: மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்து, நல்ல நடிகையாக பெயர் வாங்கியுள்ள தர்ஷனா ராஜேந்திரன் தமிழில் முதல் முறையாக முழு நீள நாயகியாக ஒரு படத்தில் அசத்தவுள்ளார்.

தனித்துவமான முயற்சியில் ஆர்வம் கொண்ட சினிமாக்காரன் எஸ் வினோத் குமார், பிரபல நாவலாசிரியர் பெருமாள் முருகன் உடன் இணைந்து புதிய படத்திற்கு கதை, வசனம் எழுதுகிறார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'சேத்துமான்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இப்படத்தை இயக்குகிறார். 

இப்படத்தில் 'கனா' புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். 'ஜெய ஜெய ஜெய ஹே', 'ஹிருதயம்' போன்ற படங்களில் தனது இயல்பான மற்றும் அற்புதமான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களை கவர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார்.  தர்ஷா ராஜேந்திரன் மலையாளத்தில் பல அட்டகாசமான படங்களில் நாயகியாக நடித்தவர்.  வைரஸ், கூடே, ஹிருதயம், துறமுகம் ஆகிய படங்களில் நடித்துள்ள தர்ஷனா, தமிழில் கவண், இரும்புத்திரை ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தொடக்கம் படத்தில் நாயகியாக அவர் நடிக்கவுள்ளார். 



நாவல்களை திரைப்படங்களாக மாற்றி தமிழ் சினிமா பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த 'முள்ளும் மலரும்' போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு சினிமாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு உதாரணமாக மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பென்னியின் செல்வன் படத்தை கூறலாம். 

குறிப்பாக, நமது பிராந்தியத்தின் இன மற்றும் மானுடவியல் அம்சங்களை அங்கீகரிக்கும் அற்புதமான நாவல்களை திரைப்படங்களாக கொண்டு வருவதையும் சினிமாத்துறை செய்து வருகிறது. நாவல்களை பற்றி கூறியிருப்பதினால் இப்படமும் நாவலின் தழுவலாக இருக்கும் என கருதப்படுகிறது.



படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர் தமிழ் பேசும்போது, "நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களை ஊக்குவிக்கும் எஸ்.வினோத் குமார் போன்ற தயாரிப்பாளரைப் பெற்றிருப்பது உண்மையில் பெரிய பாக்கியம். அனைவருக்கும் பிடித்தமான ஒரு படைப்பை மீண்டும் உருவாக்கும்  வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம்  உருவாக்குவதில் கிடைக்கும்  அற்புதமான அனுபவத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்" என்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பெங்களூரில் தொடங்கியது. படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்