இம்யூனிட்டி கம்மியா இருக்கா.. டேட்ஸ் இருக்க கவலை ஏன்.. இத சாப்பிடுங்க ஜம்முனு இருங்க

Jun 26, 2024,06:01 PM IST

உங்க குழந்தைக்கு போதுமான இம்முனிட்டி அதாவது நோய் எதிர்ப்பு சக்தி  கிடைக்கலையா.. ரொம்ப டயர்டா ஃபீல் பண்றாங்களா.. அப்ப இந்த ஒரு பழத்தை கொடுங்க. அதிக சத்துக்கள் நிறைந்த கம்மி விலையில் சந்தையில் அதிகம் கிடைக்க கூடியவை. அது என்ன பழம்னு தானே யோசிக்கிறீங்க. அது பேரிச்சம் பழம் தான்.


சரி இந்த பேரிச்சம் பழத்தின் நன்மைகள் என்ன என்று பார்ப்போமா..?


நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற அனைத்து சத்துக்களும் பேரிச்சம்பழத்தில் அடங்கியுள்ளன. இந்த பேரிச்சம் பழத்தில் கலோரிகளும் அதிகம் உள்ளன. ஒரு கிராம் பேரிச்சம் பழத்தில் 2.8 கல்லூரிகள் உள்ளன. இவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன. 


பேரிச்சம் பழங்கள் இயற்கையாகவே 80 சதவிகித சர்க்கரை அளவை கொண்டுள்ளது. இது எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நமது உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால்களை கட்டுப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இரத்த ஓட்டம் சீராகவும், ரத்த அளவு அதிகரிப்பதற்கும் பெரிதும் உறுதுணையாக உள்ளது இந்த பேரிச்சம் பழங்கள்.




இது தவிர தினசரி பேரிச்சம் பழங்களை எடுத்துக் கொள்வதால் ஆண்,பெண் இருவருக்கும் பாலியல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக உள்ளது. அமிர்தமாக இருந்தாலும் அளவோடு தான் உண்ண வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு என்றால், இந்த பேரிச்சை தான். எந்த அளவுக்கு இவற்றில் நன்மை இருக்கிறதோ, அதேபோல இவற்றில் தீமையும் உண்டு அது என்ன தெரியுமா..?


பேரிச்சம் பழ  தீமைகள்:


நிறைய சத்துக்கள்  இருக்கு. அதுலயும் கம்மி விலை தானே.  அதிக சாப்பிட்டால் என்ன ஆகப்போகுது என பேரிச்சம் பழங்களை அதிகம் உட்கொள்ளக் கூடாது. அப்படி பேரிச்சம் பழத்தை அதிகம் உட்கொள்வதால் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், போன்றவை ஏற்படும். 


பேரிச்சம் பழங்களில் இயற்கையாகவே  சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் டயாபட்டீஸ் நோயாளிகள் பேரிச்சம் பழங்களை அளவாக உட்கொள்ள வேண்டும்.


பேரிச்சம் பழங்களை எப்படி சாப்பிடலாம்..?


நம் அன்றாட வாழ்வில் உட்கொள்ளும் சரிவிகித உணவுடன் பேரிச்சம்பழத்தை அவசியம் உட்கொள்ள வேண்டும். அதாவது தினசரி இரண்டு பேரிச்சம் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 


வெறும் பேரிச்சம் பழங்களை சாப்பிட்டா போர் அடிக்குதா..உங்க குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறாங்களா.. புது விதமா இதை எப்படி சாப்பிடலாம்னு இப்ப சொல்கிறோம்.. கேட்டுக்கங்க.


பேரிச்சம்பழம் மில்க் ஷேக்: 




பேரிச்சம் பழங்களை எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி அதனை சுடு தண்ணியில் ஊற வைத்து பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும். பின்னர் தினசரி பாலுடன் ஒரு டீஸ்பூன் கலந்து தினமும் பருகி வந்தால் பாலில் உள்ள கால்சியம் மற்றும் புரதமும், பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.


பேரிச்சம் பழம் லட்டு: 


பேரிச்சம் பழங்கள்- 10 

முந்திரி- 5 

கிஸ்மிஸ் பழம்-10

ஏலக்காய்-1

வேர்க்கடலை ஒரு கைப்பிடி அளவு 


மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் கொரகொரப்பாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொடி பண்ணி வைத்த கலவைகளுடன் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதனை உருண்டைகளாக பிடித்து வைத்து தினம் ஒரு உருண்டைகளை உங்களுக்கு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதில் இயற்கையாகவே சர்க்கரை இருப்பதால் சர்க்கரையை தவிர்க்கலாம்.


பேரிச்சம்பழம் ஜூஸ்:


மதிய வேளையில் வெயில்ல ஜூஸ் குடிக்கணும் போல இருக்கா. அப்ப இந்த ஹெல்த்தியான பேரிச்சம்பழ ஜூஸை ட்ரை பண்ணி பாருங்க.


இரண்டு பேரிச்சம் பழங்களை எடுத்து அதில் உள்ள கொட்டைகளை நீக்கிக் கொண்டு, அதனுடன் பால், ஐஸ் க்யூப்களை போட்டு நன்றாக மிக்ஸியில் அடித்து  ஜில் ஜில் என பேரிச்சம்பழம் ஜூஸை பரிமாறலாம். மிகவும் அருமையாக இருக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்