கொல்லம்: கட்டிலில் அமர்ந்திருந்த 80 வயது மாமியரை கொடூரமாக தாக்கிக் கொடுமைப்படுத்திய மருமகளை போலீஸார் கைது செய்தனர்.
கேரளா மாநில கொல்லம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுமோள் தாமஸ் 42. இவர் 80 வயதான தனது மாமியார் எலியம்மா வர்கீஸ் என்பவரை அடித்து துன்புறுத்திய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எலியம்மாவுக்கும் மஞ்சுமோளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. எலியம்மாவை மஞ்சுமோள் குழந்தைகள் முன்னிலையில் கீழே தள்ளி விட்டு இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை வீட்டிற்கு அருகே இருந்த கணவரின் நண்பர் வீடியோ எடுது்துள்ளார். வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லுகிற மருமகள், மாமியார் கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில் ஓங்கி முதுகில் அடித்துத் தள்ளுகிறார்.

கதவு நிலைப்படி அருகே போய் எலியம்மா கீழே விழுந்து அழுகிறார். கையில் அடிபட்டு வலித்ததால் தனது கை, கால்களை தடவி விட்டு கொள்கிறார். இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து மஞ்சுமோளை போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.
எலியம்மாவை, மஞ்சுள் மோள் தாக்கும் கொடூரமான காட்சிகள் அடங்கிய வீடியோ பலரது கண்டனங்களை பெற்றுள்ளது. தான் மட்டுமல்லாமல் தனது பிள்ளைகளையும் எலியம்மாவை அடிக்குமாறு தூண்டி விட்டுள்ளார் மஞ்சுள் மோள் என்பதுதான் கொடுமையானது. தன்னை வீடியோ எடுப்பதைப் பார்த்து நக்கலடிக்கும் வகையில் ஆடையைத் தூக்கிக் காட்டியும் அக்கிரமமாக நடந்து கொண்டுள்ளார் மஞ்சு மோள் தாமஸ்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}