ரிடையர் ஆயிட்டேன்னு நினைக்காதீங்க.. எனக்கு ஒரு கனவு இருக்கு.. Reveal செய்த டேவிட் வார்னர்!

Jan 07, 2024,02:43 PM IST

சிட்னி: டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரு பெரும் கிரிக்கெட் வடிவங்களுக்கு குட்பை சொல்லி விட்டார் டேவிட் வார்னர். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நேற்று விடை பெற்ற வார்னர், தனது பெரும் கனவு ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.


ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்குக் கிடைத்த அதிரடி வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். மிகச் சிறந்த அதிரடியான ஓப்பனிங் பேட்ஸ்மேன். சமீபத்தில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அவர் அறிவித்திருந்தார்.


நேற்று சிட்னியில் முடிவடைந்த ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 3வது டெஸ்ட் போட்டியுடன் அவரது டெஸ்ட் கெரியர் முடிவுக்கு வந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் வார்னர் சிறப்பாக ஆடியிருந்தார்.




தனது டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தம் 8786 ரன்களைக் குவித்துள்ளார் வார்னர். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 44.59 ஆகும்.  இதில் 26 சதங்கள், 37 அரை சதங்கள் அட்கம்.  ஆஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்துள்ள 5 வீரர் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  சர்வதேச கிரிக்கெட்டில், ரிக்கி பான்டிங்குக்குப் பிறகு (27,368 ரன்கள்) அதிக ரன்களைக் குவித்துள்ள வீரர் வார்னர்தான். அவரது பங்கு 18,612 ரன்கள் ஆகும்.


டி20  போட்டிகளிலிருந்து வார்னர் இன்னும் ஓய்வு பெறவில்லை. எனவே ஆஸ்திரேலிய அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர் முக்கிய வீரராக வலம் வருகிறார். இந்த நிலையில் தனது ஓய்வு குறித்து வார்னர் கூறுகையில், கிரிக்கெட்டை விட்டு நான் போக முடியாது. இரண்டு வடிவத்திலிருந்து விலகியுள்ளேன். டி20 இருக்கிறது. அதில் தொடர்ந்து விளையாடுவேன்.


எதிர்காலத்தில் நிறைய திட்டம் உள்ளது. பயிற்சியாளராக வேண்டும் என்பது கனவு. அதை நிறைவேற்ற வேண்டும்.  எனது மனைவியுடன் முதலில் பேச வேண்டும். தொடர்ந்து விளையாடுவதற்கு அவருடன் பேச வேண்டும். 




கிரிக்கெட்டில் இன்னும் ஸ்லெட்ஜிங் இருப்பது உண்மைதான். ஆனால் அது போகப் போக முற்றிலும் மறைந்து போய் விடும். இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு அது முழுமையாக இல்லாமல் போய் விடும்.  டி20 போட்டிகள் குறிப்பாக ஐபிஎல் தொடர் போன்றவை இதற்கு உதவும். ஐபிஎல் தொடரில் பல்வேறு நாட்டு அணி வீரர்களும் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது நல்ல ஆரோக்கியமான விளையாட்டுக்கு வித்திடும் என்றார் வார்னர்.


ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஆடி வருகிறார் டேவிட் வார்னர். முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடி வந்தார். அந்த அணியின் கேப்டனாக இருந்தபோது ஐபிஎல் கோப்பையை ஒருமுறை வென்று கொடுத்தவர் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்