Depression வலுவடைந்துள்ளது.. காற்றின் வேகம் 30 நாட்ஸ்.. 35 ஆனால் புயலாகும்.. Tamilnadu Weatherman

Nov 29, 2024,10:50 AM IST

சென்னை: வங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுடையத் தொடங்கியுள்ளது. காற்றின் வேகம் 30 நாட்ஸ் என்ற அளவை நெருங்கி விட்டது. வழக்கமாக 35 நாட்ஸ் என்ற அளவில் இருந்தால் அதை புயல் என்று சொல்வார்கள் என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

அவர் சொல்தைப் பார்த்தால் தற்போதைய ஆழ்ந்த காற்றழுத்த் தாழ்வு மண்டலம் புயலாக மாறக் கூடிய வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவே உணர முடிகிறது. அதாவது கரையை நெருங்கும்போது அது புயலாக மாறி கடக்கக் கூடும் அல்லது புயலாக மாறி கரையை நெருங்கும்போது வலுவிழந்த நிலையில் கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



அதேசமயம் இந்த காற்றழுத்தத்தால் மிகப் பெரிய அளவிலான மழை சென்னை முதல் மரக்காணம் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை வெதர்மேன் பிரதீப் ஜான் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், மேகக் கூட்டம் கூடியிருப்பதைப் பாருங்கள். சிஸ்ட்ம் தற்போது மீண்டும் வலுவடைந்துள்ளது. 30 நாட்ஸ் என்ற அளவை காற்றின் வேகம் நெருங்கியுள்ளது. வழக்கமாக 35 நாட்ஸ் இருந்தால் அதை புயல் என்று சொல்வார்கள். தற்போது காற்றுத் தடுப்பு என்பது சற்று குறைந்துள்ளது. இதனால் டிப்ரஷன் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. 35 நாட்ஸ் அளவையும் தாண்டி அது 40 முதல் 45 நாட்ஸ் வரை செல்லவும் கூடும். இப்போது காற்று கூட பிரச்சினை இல்லை. மழைதான். மிகப் பெரிய மழையை எதிர்பார்க்கலாம். இந்த டிப்ரஷன் மிகப் பெரிய மேகக் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வரப் போகிறது.

பிற்பகல் தொடங்கி மாலை, இரவு என்று படிப்படியாக மழை வலுக்க ஆரம்பிக்கும்.  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை தொடங்கி மரக்காணம் வரை மிக கன மழையை எதிர்பார்க்கலாம். 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை இது இருக்கும். குறிப்பாக 30ம் தேதி அதி கன மழையை எதிர்நோக்கலாம்.

இந்திய வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம் என்று சொல்லியுள்ளார் வெதர்மேன்.

புயலாகுதோ இல்லையோ செமத்தியான மழை இருக்கப் போகிறது என்று மட்டும் தெரிகிறது. எனவே பொதுமக்களும் அதற்கேற்ப முன்னேற்பாடுகள், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்