டெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாதந்தோறும் ஒரு சிறந்த வீராங்கனையை தேர்வு செய்வது ஐசிசியின் வழக்கம். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீராங்கனையாக தீப்தி சர்மாவைத் தேர்வு செய்துள்ளது ஐசிசி.

இந்தப் போட்டியில் தீப்தி சர்மாவுடன் மற்றொரு இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் 41 வயதான ஜிம்பாப்வேயின் நட்சத்திர வீராங்கனை ப்ரீசியஸ் மாரங்கே ஆகியோரும் களத்தில் இருந்தனர். இவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தீப்தி சர்மா இந்தப் பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார்.
டிசம்பர் மாதம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடியபோது அசத்தலாக விளையாடியிருந்தார் தீப்தி சர்மா. குறிப்பாக ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒரு நாள் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் தீப்தி சர்மா. அதுதான் அவரை ஐசிசி சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்ய உதவியது.
டிசம்பர் மாதம் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் தீப்தி சர்மா 165 ரன்களைக் குவித்தார். அவரது சராசரி 55 ஆகும். ந்து வீச்சிலும் அவர் 11 விக்கெட்களை வீழ்த்தி கலக்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}