டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 10 வருடமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆம் ஆத்மி ஆட்சியைப் பறி கொடுத்தது.
48 இடங்களில் பாஜகவும், 22 இடங்களில் ஆம் ஆத்மியும் வென்றுள்ளன. காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.
வாக்கு எண்ணிக்கை - இறுதி நிலவரம்:
பாஜக | ஆம் ஆத்மி | காங்கிரஸ் |
48 | 22 | 0 |
டெல்லியில் உள்ள 70 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய முக்கியக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. இதில் பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் கடும் போட்டி நிலவியது. 3 முறையாக டெல்லியை ஆண்டு வரும் கட்சியான ஆம் ஆத்மியை வீழ்த்த இந்த முறை பாஜக மிகத் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடியே தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எடுத்த எடுப்பிலேயே பாஜக முன்னிலை பெற்றுக் காணப்பட்டது. அதேசமயம், ஆம்ஆத்மி கட்சியும் படு நெருக்கமாக பின் தொடர்நது கொண்டிருந்தது. பின்னர் பாஜகவின் கை ஓங்கத் தொடங்கியது. வேகமாக அது முன்னேற ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம் ஆத்மி ஆட்சியை இழக்குமோ என்ற அளவுக்கு நிலைமை மாறியது. இறுதியில் அபார வெற்றியைத் தொட்டது பாஜக.
முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி ஆகியோர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பின்னடவைச் சந்தித்து வந்தனர். கடைசியில் கெஜ்ரிவால் தோல்வியுற்றார். அதிஷி வென்றார். மற்ற ஆம் ஆத்மி தலைவர்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}