டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Jan 07, 2025,02:52 PM IST

டெல்லி : டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் தற்போது ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் 7வது சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.  இதையடுத்து தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய தலைநகரான டெல்லியில் 70 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 83.5  லட்சமாகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 70.7 லட்சமாகும். 3ம் பாலின வாக்காளர்கள் எண்ணிக்கை 1261 ஆகும். 




இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும். காங்கிரஸ் மூன்றாவது பெரும் சக்தியாக களம் காண உள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நியூ டெல்லி தொகுதியிலும், தற்போதைய முதல்வர் அதிஷி கல்கஜ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 


பாஜகவும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. பாஜக சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஷாகிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் ஷாகிப் சிங் வர்மாவை நியூ டெல்லி தொகுதியில் களமிறக்கி உள்ளது.


48 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்துள்ள காங்கிரஸ் முக்கியமான ஐந்து அறிவிப்புகளுடன் கூடிய தேர்தல் வாக்குறுதிகளை நேற்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து நியூ டெல்லி தெகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகன் சந்தீப் தீட்ஷித்தை களமிறக்கி உள்ளது. 


இந்த தேர்தலில் பெண்கள், முதியவர்களுக்கான விஷயங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என சொல்லப்படுகிறது. மிக கடுமையான மும்முனை போட்டி நிலவும் என்பதால் தலைநகரை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும்  எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்